×

பேய்மழையில் சிக்கி தத்தளிப்பு சீனாவில் 140க்கும் மேற்பட்ட மக்கள் பலி

பிஜிங்: சீனாவில், பேய்மழையால் 140க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 4 கோடி மக்கள் பாதித்துள்ளனர். சீனாவின் வுகான் நகரில் இருந்து கடந்தாண்டு டிசம்பர் இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் வெறியாட்டம் போட்டு வருகிறது. ஆனால், சீனாவில் மட்டும் இதன் தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது. உலக நாடுகளுக்கு இது வியப்பை தந்தாலும், அதன் மீது சந்தேக கண்ணுடன்தான் இருக்கின்றன. கொரோனாவை பரப்பவிட்ட சீனாவுக்கு மழை வடிவில் ஆபத்து வந்துள்ளது. இந்நாட்டில் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக பேய் மழை கொட்டித் தீர்த்து வருகிறது.

இதனால், 27 மாகாணங்கள் கடுமையாக பாதித்துள்ளன. 433 ஆறுகளில் வெள்ளம் அபாய கட்டத்தை தாண்டி பாய்ந்து, ஊருக்குள் புகுந்துள்ளது. 4 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் கடுமையாக பாதித்துள்ளனர். 30 ஆயிரம் வீடுகள் இடிந்து நாசமாகி உள்ளன. இதுவரை 140க்கும் மேற்பட்ட மக்கள், மழை சம்பந்தப்பட்ட விபத்துகளில் பலியாகி உள்ளனர். ஆறுகளின் கரைகளை பலப்படுத்தும் நடவடிக்கையில், சீன துணை ராணுவப்படைகள் இறக்கி விடப்பட்டுள்ளன. சீனாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரியான போயாங் ஏரி, நிரம்பி வழிகிறது. இந்நாட்டில் உள்ள உலகின் மிகப்பெரிய அணையான, மூன்று மலை அணையும் நிரம்பி, அபாயக்கட்டத்தை எட்டி இருக்கிறது. இதனால், இங்கு நீர்மின் உற்பத்தி பாதித்துள்ளது.


Tags : places ,China , Haunting, staggering, China, over 140, people, killed
× RELATED அருணாச்சலப்பிரதேசத்தில் உள்ள 30...