திருச்சிக்கு புதிதாக நியமித்த எஸ்பிக்கு கொரோனா

திருச்சி: திருச்சி மாநகர துணை கமிஷனர் நிஷா, சென்னை அம்பத்தூர் துணை கமிஷனராகவும், திருச்சி மாநகர துணை கமிஷனராக திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ஏஎஸ்பியாக இருந்த அல்லடிப்பள்ளி பவன்குமார் ரெட்டியும்  நியமிக்கப்பட்டனர். திருச்சி மாவட்ட எஸ்பி ஜியாவுல்ஹக் கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பியாகவும், அங்கிருந்த ஜெயச்சந்திரன் திருச்சி மாவட்ட எஸ்பியாகவும் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில், திருச்சி மாநகர துணை கமிஷனர் நிஷா நேற்று பொறுப்பில் இருந்து விடுவித்து கொண்டார். இந்த பணியிடத்திற்கு நியமிக்கப்பட்ட பவன்குமார்ரெட்டிக்கும், திருச்சி மாவட்ட எஸ்பியாக நியமிக்கப்பட்ட ஜெயச்சந்திரனுக்கும் கொரோனா தொற்று உள்ளதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் அவர்கள் பொறுப்பேற்பதில் தாமதம் ஏற்படலாம் என தெரிகிறது.

Related Stories: