மறுதேர்வுக்கான ஹால்டிக்கெட் விநியோகம்

சென்னை: தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் பிளஸ் 2 தேர்வு நடந்தது. இந்த தேர்வுகள் மார்ச் 24ம் தேதியுடன் முடிந்தன. தேர்வு இறுதி நாளன்று கொரோனா வைரஸ் பரவல் தொடர்பான ஊரடங்கு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதனால் மார்ச் 24ம் தேதி சில மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பொருளியல், வேதியியல், மற்றும் கணக்குப்பதிவியல் தேர்வுகள் எழுத வேண்டிய மாணவர்கள் 34 ஆயிரம் பேர் தேர்வு எழுதவில்லை. ஆனால், 766 மாணவ மாணவியர் தான், மேற்கண்ட 3 பாடத்தேர்வுகளை எழுத வரவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார். இந்நிலையில், விடுபட்ட இந்த மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இதற்கிடையே, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகத்தில் ஜூலை 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதனால்மேற்கண்ட மறு தேர்வை நடத்த முடியாமல் போனது. இருப்பினும் 27ம் தேதி உரிய பாதுகாப்புடன் மறு தேர்வு நடத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த தேர்வு எழுத சுமார் 660பேர் தான் பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கான ஹால்டிக்கெட்டுகள் நேற்று முதல் வழங்கும் பணி தொடங்கியது. 17ம் தேதி வரை ஹால்டிக்கெட் வினியோகம் நடக்கும் என்று தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பள்ளி மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளிகளில் சென்று ஹால்டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும், தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்களில் இருந்தே ஹால்டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. விரும்பிய மாணவர்களுக்கு மட்டுமே ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொடுக்க வேண்டும். மற்றவர்களுக்கு ஹால்டிக்கெட்டுகளை வினியோகம் செய்யக்கூடாது என்றும் தேர்வுத்துறை கண்டிப்பாக தெரிவித்துள்ளது.

Related Stories: