×

பாமக 32வது ஆண்டு விழா சட்டமன்ற தேர்தல் களப்பணிக்கு தயாராகுங்கள்: கட்சியினருக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை:பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று தனது தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதம்: சென்னை மெரினா கடற்கரையின் சீரணி அரங்கத்தில் மக்கள் கடலின் நடுவே 1989ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி தொடங்கப்பட்ட சமூக ஜனநாயக இயக்கமான பாமக, வரும் 16ம் தேதி 31 ஆண்டுகளை நிறைவு செய்து 32வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. எனக்கு இன்னும் சில நாட்களில் 81 வயது நிறைவடையப் போகிறது. இந்நிலையில், தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் 6 மாதங்கள் மட்டும் தான் உள்ளன. ஆனால், நாம் மேற்கொள்ள வேண்டிய களப்பணிகளோ ஏராளமாக உள்ளன.

அனைத்துக்கும் முட்டுக்கட்டையாக இருப்பது கொரோனா வைரஸ் பரவல் அச்சம் தான். நமது செயல் வீரர்களாகிய பாமகவினர் களப்பணியாற்றுவதற்காக காத்திருக்க வேண்டும். பாமக ஆண்டு விழா நாளில் அனைவரும் தங்களின் வீடுகளில் கொடியேற்றி 32வது ஆண்டு விழாவைக் கொண்டாடும்படி கேட்டுக் கொள்கிறேன். மேலும் அன்றைய தினம் இணைய வழியாக நடைபெறும் ஆண்டு விழா சிறப்பு செயற்குழு கூட்டத்தில் உங்களையெல்லாம் சந்திக்கவும், எதிர்காலத் திட்டங்கள் குறித்து உரையாடவும் காத்திருக்கிறேன். இணையத்தில் சந்திப்போம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : anniversary ,election campaign ,party ,Ramadan ,BJP Assembly , Bamaga 32nd Anniversary, Assembly Election, Fieldwork, For Parties, Ramadas
× RELATED இந்தியாவுக்காக தன்னலமின்றி சேவை...