×

திடீரென கர்நாடகா மாநிலத்தில் அதிகரிக்கும் கொரோனா: இன்று ஒரே நாளில் புதிதாக 2,738 பேருக்கு தொற்று பாதிப்பு...மாநில சுகாதாரத்துறை..!!

பெங்களூர்: கர்நாடகா மாநிலத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 2,738 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41,581-ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் 73 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதால், மொத்த இறப்பு எண்ணிக்கை 761 ஆக உயர்ந்துள்ளது.

சீனாவில் வூகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் மராட்டியத்தில் தான் கொரோனா வைரசின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. கர்நாடகாவில் கொரோனா வைரஸ் பரவல் முதலில் குறைவாகவே இருந்தநிலையில், தற்போது ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சீனாவில் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் மராட்டியத்தில் தான் கொரோனா வைரசின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. கர்நாடகாவில் கொரோனா வைரஸ் பரவல் முதலில் குறைவாகவே இருந்தநிலையில், தற்போது ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து கர்நாடகாவில் கணிசமான தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

அதில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு வெளியே பள்ளி, கல்லூரிகள், கல்வி நிலையங்கள், பயிற்சி மையங்கள் வருகிற 31ம் தேதி வரை மூடப்படுகிறது. ஆன்லைன் மூலமான கல்வி தொடர்ந்து ஊக்குவிக்கப்படுகிறது. மத்திய-மாநில அரசுகளின் பயிற்சி மையங்கள் வருகிற 15ம் தேதி முதல் இயங்கும். இதற்கு வழிகாட்டுதல் வெளியிடப்படும்.

மெட்ரோ ரெயில், திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள், பொழுது போக்கு பூங்காக்கள், மதுபான விடுதிகள், மாநாட்டு அரங்குகள் போன்றவற்றுக்கு அனுமதி இல்லை. சமூக, அரசியல், விளையாட்டு, கேளிக்கை விடுதிகள், கலாசார நிகழ்ச்சிகள், மத விழாக்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இத்தகை தடைகள் இருந்த போதிலும் தற்போது கொரோனா பாதிப்பு கர்நாடகத்தில் அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில் புதிதாக 2,738 பேருக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கர்நாடக வாழ் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Tags : Corona ,Karnataka ,State Health Department , Karnataka, Corona, State Health Department
× RELATED பெருநகரங்களை தொடர்ந்து தற்போது கிராமங்களில் கொரோனா தொற்று அதிகரிப்பு