திருவில்லிபுத்தூரில் தற்காலிக காய்கறி சந்தை மாற்றம்

திருவில்லிபுத்தூர்: கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், திருவில்லிபுத்தூரில் தற்காலிக காய்கறி சந்தை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் நகர் பகுதியின் நடுவே மேலரத வீதியில் தற்காலிக காய்கறி சந்தை இயங்கியது. சமூக இடைவெளியை பின்பற்றாமல் மக்கள் அதிகமாக கூடியதால் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்தது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தற்காலிக காய்கறி சந்தையை மங்காபுரம் தனியார் பள்ளி மைதானத்திற்கு மாற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

மேலும் ஒவ்வொரு கடைக்கும் 5 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. இதன்படி தனியார் பள்ளி மைதானத்தில் 56 கடைகள் அமைக்கப்பட்டு குழுக்கள் முறையில் டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. தற்காலிக காய்கறி சந்தையில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். முக கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே காய்கறி விற்பனை செய்ய வேண்டும். முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு காய்கறி விற்பனை செய்தால் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Related Stories: