கொரோனாவில் இருந்து தமிழகத்தை காப்பாற்ற பல்துறை வல்லுநர்கள் கருத்துக்களை கேட்டு முதல்வரின் கவனத்திற்கு 7 முக்கிய அம்சங்கள்: மு.க.ஸ்டாலின் யோசனை..!!

சென்னை: கொரோனாவில் இருந்து தமிழகத்தை காப்பாற்ற முக்கிய ஆலோசனைகளை அரசுக்கு கொண்டுவருகிறேன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பல்துறை வல்லுநர்கள் கருத்துக்களை கேட்டு முதல்வரின் கவனத்திற்கு 7 முக்கிய ஆலோசனைகளை அளிக்கிறேன். கொரோனா தொற்று கிராமப்புற பரவலாக மாறி பல்வேறு மாவட்டங்களில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனவும்  தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருகிறது.  இதையடுத்து கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,38,470 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா காரணமாக  இறப்பு எண்ணிக்கை 1,966 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று முதன்முதலாக மார்ச் 7ஆம் தேதி கண்டறியப்பட்டது. மார்ச் 21ஆம் தேதி மத்திய அரசு ஊரடங்கு அறிவிக்கும் வரை இரு வாரங்களில் தமிழக அரசு எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த இரண்டரை மாதங்களாக கொரோனா நோய்த்தொற்றால் தமிழகம் மிக மோசமான பாதிப்பிற்குள்ளாகி வருகிறது.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்றிலிருந்து தமிழகத்தை காப்பாற்ற 7 முக்கிய ஆலோசனைகளை அரசுக்கு கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார். கொரோனாவில் இருந்து தமிழகத்தை காப்பாற்றமு.க.ஸ்டாலினின் 7 முக்கிய ஆலோசனைகள் :

* ஊரடங்கு காலத்திலும் மக்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* ஏற்பட்ட பொருளாதார இழப்பை சமாளிக்க அனைவரின் கையிலும் பணப்புழக்கம் அதிகரிக்க நடவடிக்கை தேவை.

* ஒவ்வொரு குடும்பத்திற்கும் அத்தியாவசிய தேவைகளுக்காக குறைந்தபட்சம் தலா ரூ.5000 வழங்க வேண்டும்.

* ஊரடங்கு காலத்தில் உற்பத்தியாகும் பொருட்களும், மக்களும் வேறு இடத்திற்கு செல்வதை முறைப்படுத்த வேண்டும்.

* பொதுமக்கள் செல்வதற்கும், நடமாடுவதற்கும் சில தளர்வுகளுக்கு உட்பட்டு அனுமதிக்க வேண்டும்.

* ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும்.

* ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஆண்டுக்கு 250 நாட்களாக உயர்த்த வேண்டும்.

* நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையில் மூலதனச் செலவினங்களை சுகாதாரத் துறையிலும், தேவையான பிற சேவைகளிலும் அதிகரிக்க வேண்டும்  

என்பன போன்ற ஆலோசனைகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related Stories: