தமிழகத்தில் பாரத் நெட் டெண்டருக்கான அறிவிப்பு 1 வாரத்தில் வெளியாகும்: அமைச்சர் உதயகுமார் தகவல்

சென்னை: தமிழகத்தில் பாரத் நெட் டெண்டருக்கான அறிவிப்பு இன்னும் ஒரு வாரத்தில் வெளியாகும் என்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், பாரத் நெட் டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது தவறான தகவல் என்று கூறியுள்ளார். மேலும் பாரத்நெட் டெண்டர் விவகாரத்தில் தவறான தகவல்களை வெளியிட்டு வரும் நபர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பங்குபெறும் வகையில் பாரத் நெட் டெண்டர் மாற்றி அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் உதயகுமார், இன்னும் ஒரு வார காலத்தில் டெண்டர் குறித்தான அறிவிப்பை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிடுவார் என்று தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கிராமங்களில் அதிவேக இன்டர்நெட் வசதி தருவதற்காக 2 ஆயிரம் கோடியில் பாரத் நெட் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தில் கருவிகள் கொள்முதலுக்கு டெண்டர் விடப்பட்டதில் விதிகள் மீறப்பட்டு முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதையடுத்து டெண்டரில் உள்ள குறைகளை களைந்து மறு டெண்டர் விடுமாறும் மத்திய அரசு உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: