சென்னையில் நேற்று முழு ஊரடங்கை மீறியதாக 825 வழக்குகள் பதிவு: 154 வாகனங்கள் பறிமுதல்...காவல்துறையினர் தகவல்..!!

சென்னை: சென்னையில் நேற்று முழு ஊரடங்கை மீறியதாக 825 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 141 இருசக்கர வாகனங்கள், 6 ஆட்டோக்கள் மற்றும் 7 இலகு ரக வாகனங்கள் என மொத்தம் 154 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் தமிழகம் முழுவதும் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும் ஜூலை மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளில் எந்த தளர்வும் அல்லா முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து செல்பவர்களை வெறுப்பு உணர்வுடன் அண்டை மாவட்ட அதிகாரிகள் பார்க்கும் நிலை சில இடங்களில் கண்கூடாக தெரிந்தது. பொதுமக்களின் கட்டுப்பாடு இந்த முறை சிறப்பாகவே உள்ளது. போலீஸ்துறையில் பாதிப்பு அதிகம் இருப்பதால், அவர்கள் அந்த வெறுப்பை பொதுமக்களிடம் காட்டும் நிலை சில இடங்களில் காணப்பட்டது. இந்நிலையில் முழு ஊரடங்கை அமல்படுத்திய அன்று காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தனது பேட்டியில், ஊரடங்கைக் கடைப்பிடிக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்.

போலீஸார் பொதுமக்களைத் தாக்குவதோ, தண்டனை தருவதோ கூடாது. ஊரடங்கை மீறினால் நடவடிக்கை மட்டும் எடுக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் சென்னையில் நேற்று முழு ஊரடங்கை மீறியதாக 825 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 141 இருசக்கர வாகனங்கள், 6 ஆட்டோக்கள் மற்றும் 7 இலகு ரக வாகனங்கள் என மொத்தம் 154 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: