சேலத்தில் தாய் மரணத்திற்கு நீதி கேட்டு இளம் பெண் விஷம் குடித்தார்!: தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி!!!

சேலம்:  சேலத்தில் தாய் மரணத்திற்கு நீதி கேட்டு சென்ற பெண்ணை இன்ஸ்பெக்ட்டர் திட்டியதால் அவர் விஷம் குடித்துள்ளார். சேலம் மாவட்டம் சின்ன கடைவீதியில் வேலுமணி என்பவர் எலுமிச்சைபழம் விற்பனைகடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 25ம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. அப்போது காவலர்கள் தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேலுமணி என்பவர் ஊரடங்கு காரணமாக பழங்களை வீட்டிற்கு எடுத்து செல்வதற்காக கடையை திறந்துள்ளார்.

இந்நிலையில், சேலம் டவுன் கால்வர்கள், ஊரடங்கை மீறி கடையை திறந்ததாக கூறி விசாரணைக்காக வேலுமணியை காவல் நிலையம் அழைத்து சென்றுள்ளனர். மேலும், காவலர்கள் வேலுமணியை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இதனை அறிந்த அவரது தாய் பாலாமணி(75) என்பவர் காவல் நிலையத்திற்கு வந்து, தெரியாமல் நாங்கள் கடையை திறந்து விட்டோம் இனி இதுபோன்ற தவறை நாங்கள் செய்யமாட்டோம்,  இந்த ஒருதடவை மட்டும் என் மகனை மன்னித்து விட்டுவிடுங்கள் என போலீசாரிடம் கதறி அழுதுள்ளார். ஆனாலும் காவலர்கள்  வேலுமணியை விடவில்லை. இதனால் காவல் நிலையத்திலேயே பாலாமணி மயங்கி விழுந்து உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து பாலாமணியின் மகள் உமா கூறுகையில், தனது தாயை காக்க வைத்ததாலும், மகனை அவர் கண்முன்னே காவலர்கள் தாக்கியதாலும்தான் என் தாய் இறந்துவிட்டதாக கூறியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து பாலாமணியின் குடும்பத்தினர் மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளித்துள்ளனர்.இந்நிலையில்தான், மனித உரிமை ஆணையத்தில் இதுவரை எந்தவித நடவடிக்கையும் நடைபெறாத காரணத்தினால், மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுப்பதற்காக பாலாமணியின் மகள் உமா, மகன் வேலுமணி மற்றும் உயிராவினர்கள் 5 பேர் இணைந்து அலுவலகத்திற்கு வந்துள்ளனர். அப்போது காவலர் குமாருக்கும், உமாவிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர், வாக்குவாதத்தின்போது, உமா திடீரென மறைத்து வைத்திருந்த விஷத்தை எடுத்து அருந்தி விட்டு ஆட்சியர் அலுவலகம் முன்பாகவே மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த காவல் ஆய்வாளர், உமாவை உடனடியாக சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

Related Stories: