அமர்நாத் யாத்திரையை ரத்து செய்ய கோரிய மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி: அமர்நாத் யாத்திரையை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அமர்நாத் யாத்திரையை நடத்துவது அப்பகுதி உள்ளாட்சி அமைப்புகளின் பணியாகும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா சூழலில் நிகழ்ச்சிகளை நடத்துவதை உள்ளூர் அமைப்புகள் திறம்பட கையாளும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக அமர்நாத் புனித யாத்திரைக்கு நாள் ஒன்றுக்கு 500 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஜூலை 21-ம்தேதி முதல் அமர்நாத் யாத்திரை தொடங்கப்படவுள்ளது.

16 கிலோமீட்டர் தொலைவு கொண்ட பல்தால் வழிப்பாதை மட்டுமே அமர்நாத் யாத்திரைக்காக திறந்து விடப்படும். பாகல்கம் பாதை பனியால் மூடப்பட்டுள்ளது. அந்த பாதை திறக்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 42 நாட்களுக்கு அமர்நாத் புனித யாத்திரை ஆண்டுதோறும் நடைபெறும். நடப்பாண்டில் கொரோனா பாதிப்பு காரணமாக ஜூன் 23-ம் தேதி தொடங்க வேண்டிய யாத்திரை கால தாமதமாக தொடங்க உள்ளது.

Related Stories: