திருச்சியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயி தற்கொலை முயற்சி!!!

திருச்சி: திருச்சியில் விவசாயத்தை பாதிக்கின்ற கழிவுநீர் தொட்டிகளை மாற்று இடத்தில் அமைக்கக்கோரி விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 300க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த போராட்டமானது திருச்சி மாநகராட்சி ஆட்சியர் அலுவலகம் முன்பு சமூக இடைவெளியில் அமர்ந்து கிராம மக்கள் போராடி வந்தனர். இந்நிலையில், இதுகுறித்து காவல் அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதனைத்தொடர்ந்து, மக்கள் அனைவரும் கலைந்து செல்லும் போது, திடீரென ரவிக்குமார் என்ற விவசாயி மறைத்து வைத்திருந்த கத்தியை பயன்படுத்தி தனது கையிலும், வயிற்றிலும் வெட்டிக்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். விவசாய நிலத்தில் கழிவுநீர் விடக்கூடாது, விவசாயத்திற்கு வழங்கும் மின்சாரத்தை நிறுத்தக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அந்த விவசாயி கீறிக்கொண்டதாக கூறப்படுகிறது.

மேலும், இதுபோன்ற பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் எனவும் அந்த விவசாயி வலிவுறுத்தியுள்ளார். இதனைத்தொடர்ந்து, அருகிலிருந்த காவல் துறையினர் உடனடியாக அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

Related Stories: