இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு உதவிட கூகுள் இந்தியா நிதியுதவி: ரூ.75000 கோடி முதலீடு செய்யப்படும்: சுந்தர் பிச்சை பேச்சு..!!

டெல்லி: இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு உதவிட கூகுள் இந்தியா நிதியுதவி அளித்துள்ளது. இந்தியாவில் அடுத்த 5 முதல் 7 ஆண்டில் ரூ.75000 கோடி முதலீடு செய்யப்படும் என்று கூகுளின் தலைமை செயலதிகாரி சுந்தர் பிச்சை கூறியுள்ளார். இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகக் கருதப்படும் சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் தற்போது கொரோனாவால் மீளாத் துறையில் ஆழ்ந்துள்ளது. அதிக வேலைவாய்ப்புகளை வழங்கும் இத்துறையில் கொரோனாவால் ஆயிரக்கணக்கானோர் தங்களது வேலையையும் வாழ்வாதாரத்தையும் இழந்துள்ளனர்.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள குறு சிறு நடுத்தர நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்குவதற்கான அவசரகால நிதியுதவித் திட்டத்திற்கு இந்திய அரசுக்கும் உலக வங்கிக்கும் இடையில் 750 மில்லியன் டாலருக்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகியுள்ளது. கொரோனா தாக்கத்தால் உலகம் முழுவதும் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இது இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவு எனக் கூறியுள்ள உலக வங்கி, சர்வதேச அளவில் பொருளாதார வளர்ச்சி 5.2 சதவீதமாக குறையும் என தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ஊரடங்கு காரணமாக இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை செயல்முறை அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மத்தியில் இறுதியாக 4 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை பயன்பாடு மளிகை பொருட்கள், மின்சார பில்கள் மற்றும் வண்டி கட்டணங்கள் என அனைத்திற்கும் உயர்கிறது. இதனையடுத்து டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு உதவிட கூகுள் இந்தியா நிதியுதவி அளித்துள்ளது. இந்தியாவில் அடுத்த 5 முதல் 7 ஆண்டில் ரூ.75000 கோடி முதலீடு செய்யப்படும் என்று கூகுளின் தலைமை செயலதிகாரி சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.

Related Stories: