×

பெங்களூரில் ஸ்வப்னா மறைவிடத்தை காட்டிக்கொடுத்தது அவரது மகளின் சாட்டிலைட் போன்: என்.ஐ.ஏ தகவல்!!!

திருவனந்தபுரம்:  தங்கக்கடத்தல் ராணி ஸ்வப்னா பெங்களூருக்கு காரில் தப்பி செல்ல ஹவாலா கும்பல் உதவி இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், பெங்களூரில் பதுங்கி இருந்த ஸ்வப்னாவை அவரது மகள் பயன்படுத்திய சாட்டிலைட் போன் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. தங்கராணி ஸ்வப்னா கூட்டாளியுடன் கைது செய்யப்பட்டது குறித்து தோண்ட தோண்ட புதிய தகவல்கள்  கிடைத்து கொண்டே இருக்கின்றன. ஸ்வப்னாவின் தங்கக்கடத்தல் விவகாரம் கேரளாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. தற்போது அவர்களை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்து விட்டாலும், தொடர்ந்து அவர்கள் கொச்சியில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 14 நாட்கள் சிறை அடைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஆனால், கொரோனா பரிசோதனைகள் காரணமாக ஸ்வப்னா மற்றும் சந்தீப் ஆகிய இருவரும் கொரோனா சிகிச்சை மையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். இதனால் உடனடியாக அவர்களை சிறையில் அடைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், அவர்கள் இருவருக்கும் கொரோனா தொற்று இல்லை என பரிசோதனையின் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதனைத்தொடர்ந்து, ஸ்வப்னாவை நீதிமன்ற காவலில் எடுப்பதற்காக என்.ஐ.ஏ தரப்பில் மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு மீதான விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் ஸ்வப்னா பெங்களூரில் பதுங்கியபோது அவர் எப்படி? கைது செய்யப்பட்டார் என்பது குறித்தும் பல்வேறு புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.

கேரளா மாநில போலீசார், சுங்க துறையினர் மற்றும் என்.ஐ.ஏ அதிகாரிகள் என பல்வேறு புலனாய்வு அமைப்பினரும் ஸ்வப்னாவையும் அவரது கூட்டாளிகளையும் தேடி வந்தனர். இந்நிலையில், ஏற்கனவே ஸ்வப்னாவிருக்கு தீவிரவாதிகள் தொடர்பில் இருப்பார் என சந்தேகம் உள்ள நிலையில், தற்போது ஹவாலா கும்பல் உதவி இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கொச்சியிலிருந்து ஸ்வப்னாவும் அவரது கூட்டாளி சந்தீப்பும் பெங்களூருக்கு போலி நம்பர் பிளேட் பொருந்திய காரில் தப்பி சென்றது தெரிய வந்துள்ளது. இதில் போலி நம்பர் பிளேட் என்பது கேரள மாநிலம் மட்டஞ்சேரிக்கு உட்பட்டது என தெரிவிக்கப்படுகிறது. மேலும், ஸ்வப்னாவின் மகளுக்கு திருவனந்தபுரத்தில் ஒரு நண்பர் இருக்கிறார். இந்நிலையில் ஸ்வப்னாவின் மகள் தொடர்புகொண்டு அவரிடம் பேசியுள்ளார். நாங்கள் மிகவும் ஆபாயகரத்தில் இருப்பதாக ஸ்வப்னாவின் மகள் சாட்டிலைட் போன் மூலம் தனது நண்பரிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், போன் அழைப்பு வந்தபோது ஸ்வப்னாவின் மகளின் நண்பர் புலனாய்வு பிரிவு அதிகாரிகளின் பிடியில் இருந்தார். அப்போது அதிகாரிகள் நண்பரிடம் சைகையில் ஸ்வப்னாவின் போனை ஆன் செய்யுமாறு கூறியுள்ளனர். இதனைத்தொடர்ந்து செல் போன் ஆன் செய்ததின் மூலமாக அதிகாரிகள், ஸ்வப்னா இருப்பிடத்தை அறிந்து அங்கு சென்றுள்ளனர். இந்நிலையில், பெங்களூரில் உள்ள சர்வீஸ் அப்பாட்மென்டில் வைத்து இருவரையும் என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர். மேலும், என்.ஐ.ஏ அதிகாரிகள் ஸ்வப்னாவை பிடிப்பதற்காக அவரது உறவினர்களின் 15 செல் போன்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Swapna ,hideout ,Bangalore , Swapna hideout in Bengaluru: Satellite phone of her daughter: NIA info !!!
× RELATED பெங்களூரு வணிக வளாகத்தில் தீ விபத்து:...