×

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு...! 88.78% தேர்ச்சி; சென்னை மண்டலத்திற்கு 3-வது இடம்

டெல்லி: சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள் இணையதளத்தில் தங்கள் தேர்ச்சி விபரத்தை அறிந்து கொள்ளலாம். ஒட்டுமொத்தமாக 88.78 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் பிப்ரவரி மாதம் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வும், மார்ச் மாதம் 10-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளும் தொடங்கியது. கொரோனா ஊரடங்கால் சி.பி.எஸ்,இ 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான சில பாடங்களில் பொதுத்தேர்வு நடத்தப்படவில்லை.

இதற்காக, தேதி அறிவிக்கப்பட்டு பின்னர், தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.  சில பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்ற போதும் பின்னர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சில தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு அகமதிப்பீடு, செயல்முறை தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண் வழங்க கடந்த மாதம் 26 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அனுமதியளித்தது. இதனால் மாணவர்களின் மதிப்பெண்களை கணக்கீடும் பணியில் சிபிஎஸ்இ ஈடுபட்டது. மேலும், 12-ம் வகுப்புக்கு நடத்தப்படாத பாடங்களுக்கு மதிப்பெண்களை கணக்கிட புதிய வழிமுறை நடைமுறைப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், CBSE 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் http://cbseresults.nic.in  என்ற தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. 88.78% மாணவர்கள் தேர்ச்சி அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு பொதுத் தேர்வின் போது 83.40 மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். எனவே அதைவிட ஒப்பிடும்போது இந்த வருடம் 5.3 8% மாணவர்கள் அதிக தேர்ச்சி அடைந்துள்ளனர். திருவனந்தபுரம் மண்டலம் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதத்தில் முதல் இடம் பிடித்துள்ளது. 97.67 சதவீத மாணவர்கள் திருவனந்தபுரம் மண்டலத்தில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Tags : region ,Chennai ,CBSE , CBSE, Class 12, Exam Results, Chennai
× RELATED இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பதற்றம்!