தமிழகம் முழுவதும் கணினிமயமாகும் மதுபானக் கடைகள்..: டெண்டர் அறிவிப்பை வெளியிட்டது டாஸ்மாக் நிர்வாகம்

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை கணினி மயமாக்குவதற்கான டெண்டர் அறிவிப்பை டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக மதுபான கடைகள் சில நாட்கள் மூடப்பட்டு இருந்த நிலையில், மதுபானம் இணையதள விற்பனை மற்றும் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை போன்ற முறைகள் குறித்த தகவல் ஆன்லைன் மயமாக்கப்பட வேண்டிய சூழல் நீதிமன்றத்திற்கு செல்கையில் எழுந்தது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகள் கணினிமயமாக்குவதற்கான டெண்டர் அறிவிப்பை டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. மதுபானங்களின் இருப்பு, விற்பனை விவரங்களை அறிக்கையாக தயாரித்து கணினிமயமாக்க டெண்டர் அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது.

இதன்மூலம் டாஸ்மாக் கடைகள் அனைத்தையும் டாஸ்மாக் தலைமை அலுவலகத்துடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளுக்கான வசதிகளையும் ஏற்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. தமிழகத்தில் அதிகளவு அரசிற்கு வருமானம் தரும் முக்கிய ஆதாரமாக இருப்பது டாஸ்மாக் வருமானம். தமிழகத்தில் வருடத்திற்கு பல ஆயிரம் கோடிக்கணக்கில் டாஸ்மாக் மூலமாக தமிழக அரசு வருமானம் ஈட்டி வருகிறது. ஆடம்பரங்கள் இல்லாமல், நான்கிற்கு நான்கு அறையில் செயல்பட்டு வரும் மதுபான கடை மற்றும் 3 சென்ட் பரப்பில் இயங்கி வரும் மதுபான கடை பார்கள் பல வகையில் லாபம் பார்த்து வருகிறது, குறிப்பிடத்தக்கது.

Related Stories: