×

ஸ்பெயினில் கொரோனாவின் 2வது அலை பரவும் அச்சம்!: பல்வேறு இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு!!!

பார்சிலோனா: ஸ்பெயினில் கொரோனாவின் 2வது அலை பரவும் அச்சம் காரணமாக பல்வேறு இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டில் ஸ்கேட்டலோனியாஸ் பகுதியில் கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்தும் வகையில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பக்கப்பட்டுள்ளது. சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிசம்பர் 1ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 209க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், ரஷ்யா, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால்  கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஸ்பெயினில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 28,403 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 300,988 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஸ்பெயினில் கொரோனாவின் இரண்டாவது அலை பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளதால் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ல்லேய்டா மற்றும் செக்ரையாவில் அடங்கிய 7 நகராட்சிகளில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு அப்பகுதிகளில் உள்ள சாலைகள் யாவும் போக்குவரத்து நெரிசலின்றி வெறிச்சோடி காணப்பட்டது. ஸ்பெயினில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் தற்போது 2வது அலை உருவாகி வேகமாக பரவக் கூடிய அபாயம் எழுந்துள்ளது. எனவே இதனை தடுக்கும் வகையில் 2வது முறையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கேட்டலான் சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

Tags : wave ,Spain ,places , Fear of the 2nd wave of the corona in Spain !: Curfew issued in various places !!!
× RELATED மோடி அலை இல்லை: பாஜக வேட்பாளர் பேச்சால் பரபரப்பு