கொரோனா தடுப்புப் பணிகளில் ஆசிரியர்களின் சேவையை எதிர்பார்க்கிறோம் : உயர்நீதிமன்றம் கருத்து!!

சென்னை : கொரோனா போன்ற பேரிடர் காலத்தில் ஆசிரியர்களின் சேவையை நீதிமன்றம் எதிர்பார்ப்பதாக உயர்நீதிமன்றம் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். அதே சமயம் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படும் ஆசிரியர்களுக்கு பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி

கொரோனா தடுப்புப் பணிகளில் மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்த தடை கோரி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் தாக்கல் செய்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், ஆசிரியர்கள் என்பவர்கள் இயற்கையாகவே தலைமை பொறுப்பு கொண்டவர்கள். பேரிடர் காலங்களில் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக ஆசிரியர்கள் இருக்க வேண்டும்.பேரிடர் காலத்தில் ஆசிரியர்களின் சேவையை நீதிமன்றம் எதிர்பார்க்கிறது. ஆசிரியர்கள் ஒருங்கிணைப்பு பணியை மட்டுமே மேற்கொள்வர்.களத்திற்கு அனுப்பப்படுவதில்லை. ஆதலால் கொரோனா தடுப்புப் பணியில் ஆசிரியர்கள் பயன்படுத்த தடை விதிக்க முடியாது, என தெரிவித்தனர். மேலும் தடுப்புப் பணியில் ஈடுபட தடை கோரும் ஆசிரியர்கள், அப்பணியில் ஈடுபடாவிட்டால் சம்பளத்தை விட்டுக் கொடுக்க முன்வருவார்களா என கேள்வி எழுப்பிய நிலையில், ஆசிரியர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

வழக்கின் பின்னணி

தமிழகத்தில் பல  மாவட்டங்களில் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் கொரோனா தடுப்பு பணிக்கு வர  விரும்பும் ஆசிரியர்கள் மட்டுமே பணிக்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில், அனைத்து ஆசிரியர்களும் பணிக்கு வர வேண்டும் என சென்னை மாநகராட்சி  அறிவித்து, பணி பட்டியலையும் வெளியிட்டு, பணிக்கு வரா விட்டால் இடை நீக்கம் என்றும் எச்சரித்துள்ளது . அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் பயன்படுத்தும் விதமாக பணிகள் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் 3 ஷிப்ட்கள் பணியாற்ற அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். ஆனால்  போக்குவரத்து வசதி ஏதும் இல்லாத நிலையில், பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவை மீறி 50வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களையும்  கொரோனா தடுப்பு பணிக்கு வர நிர்ப்ந்திப்பதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆசிரியர் சங்கம் சார்பாக மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை இன்று உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

Related Stories: