×

மகிழ்ச்சியில் மாணவர்கள்; கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்...உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தகவல்

சென்னை: தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்திருக்கிறார். தமிழகத்தை பொறுத்தவரையில் கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க வேண்டும் எனில் ஒவ்வொரு கல்லூரிக்கும் தனி தனியாக சென்று மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்ற சூழல் இருந்தது. இதனை மாற்றும் விதமாக பொறியியல் மாணவர்களுக்கு நடத்தப்படும் ஒற்றை சாளர கலந்தாய்வை போன்று கலை அறிவியல் கல்லூரிகளுக்கும் கொண்டு வருவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டிருந்தன. கடந்த ஓராண்டாக இதற்கான முயற்சிகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில் இந்த முயற்சியை இந்த ஆண்டிலிருந்தே நடைமுறைப்படுத்துவதற்கான முடிவை தமிழக உயர்கல்வித்துறை எடுத்திருக்கிறது. தொடர்ந்து இந்த ஆண்டு முதலே ஆன்லைன் மூலமாகவே தமிழகத்தில் கலை அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தகவல் தெரிவித்திருக்கிறார். குறிப்பாக 2 நாட்களில் மாணவர்கள் சேர்க்கைக்கான இணையதளம் தொடங்கி வைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

வெவ்வேறு கல்லூரியில் விண்ணப்பிப்பதால் இரண்டு கல்லூரிகளிலும் நடைபெறும் நேர்காணலை சந்திக்க நேரிடும் சூழல் என்பது இந்த ஆன்லைன் விண்ணப்பம் மூலமாகவும், கலந்தாய்வு மூலமாகவும் தவிர்க்க முடியும். எனவே ஒற்றை சாளர ஆன்லைன் விண்ணப்பம் மூலமாக ஒரே நேரத்தில் பல விருப்ப கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கக்கூடிய பலனும் மாணவர்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : colleges ,Minister ,College of Arts and Sciences , Students in Happiness; You can apply online to join the College of Arts and Sciences ... Minister of Higher Education
× RELATED காஞ்சி இலக்கிய வட்ட கூட்டம்