சற்றே குறைந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்த ஆபரண தங்கத்தின் விலை..: சென்னையில் ஒரு சவரன் ரூ.37,568க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2 மாதமாக தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. திடீரென வரலாற்று சாதனையும் நிகழ்த்தி வருகிறது. கடந்த 1ம்தேதி ஒரு சவரன் 37,472க்கும், 2ம் தேதி, 3ம் தேதி, 4ம் தேதி, 6ம்தேதிகளில் தங்கம் விலை மாறாமல் சவரன் 36,976 என்று  விற்கப்பட்டது?. அதைத்தொடர்ந்து 7ம்தேதி சவரன் 37,008, 8ம் தேதி 37,536, 9ம் தேதி பவுன் 37,744க்கும் விற்கப்பட்டது. சவரன் 37,744 என்பது தங்கம் விலை வரலாற்றில் அதிகபட்ச விலை என்ற சாதனையை படைத்தது.

இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் நேற்று முன்தினம் கிராமுக்கு 17 குறைந்து ஒரு கிராம் 4,689க்கும், சவரனுக்கு 136 குறைந்து ஒரு சவரன் 37,512க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை  மீண்டும் உயர்ந்துள்ளது. அதாவது கிராமுக்கு ரூ.7 உயர்ந்து ஒரு கிராம் 4,696க்கும், சவரனுக்கு  ரூ.56 உயர்ந்து ஒரு சவரன் ரூ.37,568க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.56 ஆக உள்ளது. அதன்படி, ஒரு கிலோ வெள்ளி ரூ.56,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை உயர்ந்தால் அதிக அளவு உயர்கிறது. குறைந்தால் பெயரளவுக்கு குறைவது என்பது நகை வாங்குவோரை கவலையடைய செய்துள்ளது.

Related Stories: