×

இந்தியாவிலேயே முதல் நடமாடும் திருமண மண்டபத்தை உருவாக்கி திருப்பூர் சிற்ப கலைஞர் அசத்தல்!!

திருப்பூர் : இந்தியாவிலேயே முதன்முறையாக திருப்பூரைச் சேர்ந்த சிற்ப கலைஞர் ஒருவர் நடமாடும் திருமண மண்டபத்தை உருவாக்கியுள்ளார். கொரானாவை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கின் விதிகளின்படி திருமண மண்டபங்கள் திறக்கப்படுவதில்லை. எனவே திருமண நிகழ்ச்சிகள், மற்ற விஷேச நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள் சிறு கோவில்கள் அல்லது வீட்டிலேயே அளவான உறவினர்ளுடன் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தான், திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையில் சிற்பக் கலைஞர் ஹக்கீம் என்பவர் தனிநபராக புதிய நடமாடும் திருமண மண்டபத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். சிற்பக் கலையில் தனி முயற்சியாக யானை, கொரில்லா போன்ற விலங்குகள் அசைந்து செல்வது போன்ற பொம்மைகள் செய்துள்ளார். இதேபோல் ஈச்சர் வேனின் பின்புறத்தை திருமண வரவேற்பு மண்டபமாக ஹக்கீம் மாற்றியுள்ளார். இதில் காந்திநகரை சேர்ந்த மணமக்கள் மதன்குமார், நந்தினி ஆகியோரின் திருமண நிகழ்ச்சியில் நடைபெற்றது, சிற்பக் கலைஞர் ஹக்கீமின் இந்த முயற்சிக்கு அப்பகுதி மக்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.

இந்த நடமாடும் திருமண மண்டபம் குறித்து ஹக்கீம் கூறுகையில், மிகக் குறைந்த வாடகையில் இந்த மண்டபத்தை உருவாக்கியுள்ளேன். உடுமலைபேட்டை மற்றும் அனைத்து ஊர்களுக்கும் கொண்டு சென்று குடும்ப இல்ல நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் தங்களது குழுவுடன் ஏற்பாடு செய்து தரப்படும். தமிழகத்தில் முதன்முறையாக இதுபோன்ற செயற்கை விலங்குகள் மற்றும் நடமாடும் திருமண மஹால் அறிமுகம் செய்யப்படுகிறது, என்றார்.

Tags : sculptor ,India ,Tirupur ,wedding hall , India, Mobile, Wedding Hall, Tiruppur, Sculptor, Stunning
× RELATED பங்களாதேஷ் நாட்டில் இருந்து...