×

ஆம்பூரில் போலீசார் கண்டித்ததால் இளைஞர் தீக்குளித்த விவகாரம்!: பணியில் இருந்த 3 காவலர்கள், 2 ஊர்காவலர்கள் இடமாற்றம்!!!

திருப்பத்தூர்: ஆம்பூரில் மருந்து வாங்க சென்ற போது இருசக்கர வாகனத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்ததால் இளைஞர் தீக்குளித்தது தொடர்பாக பணியில் இருந்த 3 காவலர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுடன் ஊர்க்காவல் படையை சேர்ந்த 2 பேரையும் பணியிடமாற்றம் செய்து திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர், விசாரணை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

ஆம்பூர் அண்ணாநகரை சேர்ந்த முகிலன் என்றவர் ஊரடங்கை மீறி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இதனால் அவரது இருசக்கர வாகனத்தை ஒய்.ஆர். திரையரங்கள் அருகே போலீசார் வழிமறித்து பறிமுதல் செய்திருக்கின்றனர். இதன் காரணமாக முகிலன் போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் வாகனத்தை கொடுக்காவிட்டால் தீ குளித்து விடுவேன் என எச்சரித்துள்ளார். அப்போதும் போலீசார் கண்டு கொள்ளவில்லை. இதனால் மனமுடைந்த முகிலன், தனது வாகனத்தில் வைத்திருந்த பெட்ரோல் கேனை எடுத்து தன் மீது ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

தொடர்ந்து, தீக்காயங்களுடன் வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முகிலன், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பணியில் இருந்த 3 காவலர்கள் மற்றும் அவர்களுடன் ஊர்க்காவல் படையை சேர்ந்த 2 பேரையும் பணியிடமாற்றம் செய்து திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Tags : Youth fire incident ,Ambur ,policemen ,Kayts ,Guards ,Relocation ,Ambur, Youth, Work , Ambur, Youth, Work, Guards, Kayts, Relocation
× RELATED சட்டீஸ்கரில் நடந்த என்கவுன்டரில் 29...