முதன்முறையாக ஒரே நாளில் 28,701 பேர் பாதிப்பு; இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8.78 லட்சத்தை தாண்டியது; 23,174 பேர் பலி

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 லட்சத்து 78 ஆயிரத்தை தாண்டியது.  உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீயாக பரவி வருகிறது. கொரோனா  வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,78,254-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில்  மட்டும் 28,701 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் இதுவரை 23,174 பேர் உயிரிழந்த நிலையில்,  கடந்த 24 மணி நேரத்தில் 500 உயிரிழந்துள்ளனர். இதுவரை 5,53,471 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து  வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 18,850 பேர் குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம்  அறிவித்துள்ளது.

இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 2,54,427 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதுவரை 10,289 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1,40,325 பேர் குணமடைந்துள்ளனர். இந்த வரிசையில் தமிழகம் 2-வது  இடத்தில்   உள்ளது. தமிழகத்தில் 1,38,470 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1,966பேர்  உயிரிழந்துள்ள நிலையில், 89,532 பேர் குணமடைந்துள்ளனர். டெல்லி 3-வது இடத்தில் உள்ளது. டெல்லியில் 1,12,494  பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, 3,371 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 89,968 பேர்  குணமடைந்துள்ளனர். தற்போது வரை இந்தியாவில் 3,01,609 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளளது குறிப்பிடத்தக்கது.

மாநில வாரியாக விவரம்:

அசாமில் 16,071 பேருக்கு பாதிப்பு; 35 பேர் பலி; 10,426 பேர் குணமடைந்தது.

பீகாரில் 16,642 பேருக்கு பாதிப்பு; 143 பேர் பலி; 11,498 பேர் குணமடைந்தது.

சண்டிகரில் 559 பேருக்கு பாதிப்பு; 8 பேர் பலி; 417 பேர் குணமடைந்தது.

சத்தீஸ்கரில் 4059 பேருக்கு பாதிப்பு; 19 பேர் பலி; 3153 பேர் குணமடைந்தது.

கோவாவில் 2,453 பேருக்கு பாதிப்பு; 14 பேர் பலி; 1487 பேர் குணமடைந்தது.

குஜராத்தில் 41,820 பேருக்கு பாதிப்பு; 2045 பேர் பலி; 29,162 பேர் குணமடைந்தது.

அரியானாவில் 21,240 பேருக்கு பாதிப்பு; 301 பேர் பலி; 15,409 பேர் குணமடைந்தது.

திரிபுராவில் 2054 பேருக்கு பாதிப்பு; 2 பேர் பலி; 1,421 பேர் குணமடைந்தது.

கேரளாவில் 7873 பேருக்கு பாதிப்பு; 31 பேர் பலி; 4095 பேர் குணமடைந்தது.

ராஜஸ்தானில் 24,392 பேருக்கு பாதிப்பு; 510 பேர் பலி; 18,103 பேர் குணமடைந்தது.

ஜார்கண்டில் 3756 பேருக்கு பாதிப்பு; 30 பேர் பலி; 2308 பேர் குணமடைந்தது.

லடாக்கில் 1086 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 928 பேர் குணமடைந்தது.

மணிப்பூரில் 1,609 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 896 பேர் குணமடைந்தது.

மேகலாயாவில் 306 பேருக்கு பாதிப்பு; 2 பேர் பலி; 66 பேர் குணமடைந்தது.

மிஸ்ரோமில் 231 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 150 பேர் குணமடைந்தது.

நாகாலாந்தில் 774 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 327 பேர் குணமடைந்தது.

ஒடிசாவில் 13,121 பேருக்கு பாதிப்பு; 64 பேர் பலி; 8750 பேர் குணமடைந்தது.

பாண்டிச்சேரி 1418 பேருக்கு பாதிப்பு; 18 பேர் பலி; 739 பேர் குணமடைந்தது.

பஞ்சாப்பில் 7,821 பேருக்கு பாதிப்பு; 199 பேர் பலி; 5392 பேர் குணமடைந்தது.

உத்தரகாண்ட்டில் 3,537 பேருக்கு பாதிப்பு; 47 பேர் பலி; 2,786 பேர் குணமடைந்தது.

கர்நாடகாவில் 38,843 பேருக்கு பாதிப்பு; 684 பேர் பலி; 15,409 பேர் குணமடைந்தது.

ஜம்மு காஷ்மீரில் 10,513 பேருக்கு பாதிப்பு; 179 பேர் பலி; 5,979 பேர் குணமடைந்தது.

தெலுங்கானாவில் 34,671 பேருக்கு பாதிப்பு; 356 பேர் பலி; 22,482 பேர் குணமடைந்தது.

மேற்கு வங்கத்தில் 30,013 பேருக்கு பாதிப்பு; 932 பேர் பலி; 18,581 பேர் குணமடைந்தது.

உத்தரப்பிரதேசத்தில் 36,476 பேருக்கு பாதிப்பு; 934 பேர் பலி; 23,334 பேர் குணமடைந்தது.

ஆந்திரப்பிரதேசத்தில் 29,168 பேருக்கு பாதிப்பு; 328 பேர் பலி; 15,412 பேர் குணமடைந்தது.

அருணாச்சலப்பிரதேசத்தில் 359 பேருக்கு பாதிப்பு; 2 பேர் பலி; 138 பேர் குணமடைந்தது.

மத்தியப்பிரதேசத்தில் 17,632 பேருக்கு பாதிப்பு; 653 பேர் பலி; 12,876 பேர் குணமடைந்தது.

இமாச்சலப்பிரதேசத்தில் 1213 பேருக்கு பாதிப்பு; 11 பேர் பலி; 929 பேர் குணமடைந்தது.

அந்தமானில் நிக்கோபார் தீவுகளில் 163 பேருக்கு பாதிப்பு; 93 பேர் குணமடைந்துள்ளனர். யாரும் உயிரிழக்கவில்லை.

தாதர் நகர் ஹவேலியில் 479 பேருக்கு பாதிப்பு; 245 பேர் குணமடைந்துள்ளனர். யாரும் உயிரிழக்கவில்லை.

சிக்கிமில் 153 பேருக்கு பாதிப்பு; 81 பேர் குணமடைந்துள்ளனர். யாரும் உயிரிழக்கவில்லை.

Related Stories: