×

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின்போது 2 வாரம் தனிமைப்படுத்தல் ரொம்ப அதிகம்: சவுரவ் கங்குலி அதிருப்தி

புதுடெல்லி: ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ள இந்திய அணி வீரர்கள், 2 வார காலத்துக்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என கட்டாயப்படுத்துவது சரியல்ல என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அதிருப்தி தெரிவித்துள்ளார். இது குறித்து கங்குலி கூறியதாவது: இந்த ஆண்டு இறுதிக்குள் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு விளையாட செல்வது உறுதி. அந்தப் போட்டி முக்கியமான போட்டியாக இருக்கும். ஆனால் டிசம்பர் மாதம் நான் பிசிசிஐ தலைவர் பதவியில் இருப்பனோ என்பதை உறுதியாக சொல்ல முடியவில்லை. தலைவர் பதவியில் இருந்த 7, 8 மாதங்களில் 4 மாதங்களுக்கு மேல் பிசிசிஐ அலுவலகம் செல்லவில்லை. கொரோனா தொற்று பீதி காரணமாக வீட்டில்தான் இருக்கிறோம். சக நிர்வாகிகளிடம் காணொலி காட்சி மூலம்தான் பேசுகிறோம். இந்த நிலைமை உடனடியாக மாறாது. இப்போதைய சூழ்நிலையிலும் சிறப்பாக செயல்பட முயற்சித்து வருகிறோம்.

லோதா குழு பரிந்துரைகளின் படி இந்த மாதத்துடன் பதவி முடிகிறது. அதனால் நீதிமன்றத்தில் எனக்கும், ஜெய் ஷா உள்ளிட்டவர்களுக்கும் பதவி நீட்டிப்பு கோரி மனு செய்துள்ளோம். நீட்டிப்பு கிடைக்குமா, கிடைக்காதா என்பது தெரியவில்லை. இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா செல்லும் போது வீரர்கள்  2 வாரம் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஐசிசியின் புதிய விதி கூறுகிறது. ஆனால், இரண்டு வாரம் தனிமைப்படுத்திக் கொள்ளுதல் என்பது ரொம்ப அதிகம். இவ்வளவு நாட்கள்  வீரர்கள் ஓட்டல்களில் அடைந்து கிடந்தால் மன அழுத்தம், ஏமாற்றம் ஏற்படும். எனவே வீரர்களை தனிமைப்படுத்தும் காலத்தை குறைக்க வேண்டும். அதுமட்டுமல்ல ஆஸ்திரேலியாவில் மெல்போர்னை தவிர மற்ற இடங்களிலும், நியூசிலாந்திலும் இப்போது நிலைமை மேம்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவர் பதவிக்கு நான் போட்டியிட உள்ளதாக பரவும் தகவல்கள் வெறும் வதந்தி தான். அதற்கு இன்னும் காலம் இருக்கிறது. இவ்வாறு கங்குலி கூறியுள்ளார்.

Tags : tour ,Australian ,Saurav Ganguly , Australian, tour, 2 week loneliness, too much, Saurav Ganguly, dissatisfaction
× RELATED கீழடி அருங்காட்சியகத்தில் 4 சுற்றுலா கைடுகள் நியமனம்