×

சொல்லிட்டாங்க...

* சீனா 30 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவையும், ஜப்பானையும்தான் எதிரிகளாக கருதியது. இப்போது இந்தியாவை குறிவைக்கிறது. - தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார்

* பல்கலை மற்றும் கல்லூரிகளின் இறுதி பருவ தேர்வுகளை ரத்து செய்து விட்டு, அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்க வேண்டும் என்பது மாநில அரசுகளின் ஆசை அல்ல. - பாமக நிறுவனர் ராமதாஸ்

* நாட்டில் சிறந்த தலைவர்கள் அனைவரும் அதிகம் புத்தகம் படித்து அறிவை வளர்த்துக் கொண்டுள்ளனர். கொரோனாவால் தனிமையில் உள்ள நான் நல்ல புத்தகங்களை படிக்கிறேன். - கர்நாடக முதல்வர் எடியூரப்பா

* மக்களை பாதுகாக்க நிதி ஒதுக்காமல் நெடுஞ்சாலை திட்டங்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் விரயம் செய்வதில் தமிழக அரசுக்கு ஏதே உள்நோக்கம் உள்ளது. - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

Tags : Told
× RELATED சொல்லிட்டாங்க...