×

ஆலைகளில் உற்பத்தி குறைவால் டாஸ்மாக் கடைகளில் மது பற்றாக்குறை?

சென்னை: மதுபான ஆலைகளில் உற்பத்தி குறைவால் டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. தமிழகத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு வாரம் தோறும் அல்லது மதுபானங்கள் இருப்பு குறைவதற்கு ஏற்ப ஆலைகளில் இருந்து மதுபான வகைகள் இறக்குமதி செய்யப்படுகிறது. கொரோனா தொற்றின் காரணமாக கடந்த மார்ச் 24ம் தேதி முதல் தமிழகத்தில் தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டது. இதேபோல், மதுபானம் உற்பத்தி செய்யும் ஆலைகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்தநிலையில், அரசு அறிவித்த தளர்வுகளின் அடிப்படையில் மே மாதம் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது.

இதேபோல், மதுபான ஆலைகளிலும் உற்பத்தி தொடங்கியது. தற்போது தொழிற்சாலைகளில் சமூக இடைவெளியை பின்பற்றி பணியாற்ற வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், 50 சதவீத பணியாளர்கள் சுழற்சி முறையில் தினம் தோறும் தொழிற்சாலைகளில் பணியாற்றி வருகின்றனர். சுழற்சி முறையில் பணிசெய்வதால் காரணமாக மதுபான ஆலைகளில் தற்போது உற்பத்தி குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, சாதாரண ரக மதுவகைகள் 40 சதவீதமும், நடுத்தர ரக மதுவகைகள் 40 சதவீதமும், உயர் ரகம் 20 சதவீதமும் கடைகளில் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது.

தற்போது, மதுபான ஆலைகளில் உற்பத்தி குறைந்ததன் காரணமாக நடுத்தர மற்றும் சாதாரண ரக மதுவகைகளின் கொள்முதல் பாதியாக குறைந்துள்ளது. அதன்படி, நடுத்தர ரக மதுவகைகள் 20 சதவீதமும், சாதாரண ரக மதுவகைகள் 20 சதவீதம் மட்டுமே டாஸ்மாக் கடைகளுக்கு கொள்முதல் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதேபோல், 20 சதவீதம் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டு வந்த உயர் ரக மதுவகைகள் தற்போது 40 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் டாஸ்மாக் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

Tags : stores ,Tasmag ,factories ,shortage , Factory, manufacturing, Tasmac store, alcohol shortage?
× RELATED தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று...