×

மத்திய அரசு திட்டங்களை மறைக்கும் அதிமுக அரசு: மாநில பாஜ ஊடக பிரிவு தலைவர் குற்றச்சாட்டு

திருவள்ளூர்: பாஜ மாநில ஊடக பிரிவு தலைவர் ஏ.என்.எஸ்.பிரசாத் நிருபர்களின் கூறியதாவது: தமிழகத்தில் 3.50 லட்சம் சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.6,000 கோடி வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது. ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் மூன்று ஆண்டுகளுக்குள் ஒரு கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க மோடி அரசு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. இதற்கு ரூ.2,375 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுபோன்று பல நல்ல திட்டங்கள் மத்திய அரசு தமிழகத்திற்கு செய்து வருகிறது. ஆனால் தமிழக அரசு, மத்திய அரசின் திட்டங்களை சரியாக விளம்பரப்படுத்தாமல் இருட்டடிப்பு செய்து மறைக்கிறது என்றார்.

Tags : media unit leader ,government ,AIADMK ,BJP ,State , Central government plan, cover-up, AIADMK government, state BJP media unit chief, accused
× RELATED சூழ்நிலை சரியான பிறகே பள்ளிகள் திறப்பு: அரசு அறிவிப்பு