×

செங்கல்பட்டு மாவட்டத்தில் 245 பேருக்கு கொரோனா தொற்று

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 245 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை 158 பேர் கொரோனாவால் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச்சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் கொரோனா நோய் தொற்று வார்டில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா இறப்பு விகிதம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.  

சென்னை புறநகர் பகுதியில் உள்ள பல்லாவரம், பரங்கிமலை, தாம்பரம், செம்பாக்கம், அனங்காபுத்தூர், பம்மல், சிட்லாக்கம், மீனம்பாக்கம், மேடவாக்கம், பெருங்களத்தூர், பீர்க்கன்காரனை உள்ளிட்ட மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் நாளுக்குநாள் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிகளவு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்திய அளவில் அதிக தொற்று ஏற்பட்டுள்ள நகரங்கள் பட்டியலில் செங்கல்பட்டு மாவட்டமும் இடம் பிடித்துள்ளது. இது அதிகாரிகள் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

* காஞ்சிபுரம் மாவட்டத்தில் 146 பேருக்கு கொரோனா
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதிதாக 146 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் நகராட்சியில் ஒரே நாளில் 75 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் இதுவரை 2404 நபர்களுக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 146 பேருக்கு இந்நோய் தொற்று புதிதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2550 ஆக அதிகரித்துள்ளது. காஞ்சிபுரம் நகராட்சிப் பகுதியில் சுமார் 400 க்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

மேலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூரைச் சேர்ந்த வெல்டர் மற்றும் காஞ்சிபுரத்தை அடுத்த பெரும்பாக்கத்தைச் சேர்ந்த விவசாயி மற்றும் ஆதனூரைச் சேர்ந்த ஒருவர் உள்ளிட்ட 30 நபர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்நிலையில் காஞ்சிபுரம் நகராட்சிப் பகுதியில் 75 பேருக்கும், ஒன்றியப் பகுதியில் 11 பேர், ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த 20 பேர், வாலாஜாபாத், குன்றத்தூரைச் சேர்ந்த தலா 5 பேர், கோவூரைச் சேர்ந்த 3 பேர், அய்யப்பன்தாங்கல், பெரிய பணிச்சேரி, சிறுகளத்தூரைச் சேர்ந்த தலா 2 பேர், மாங்காட்டைச் சேர்ந்த 9 பேர், மவுலிவாக்கம், கொலச்சேரி, பரணிபுத்தூர், நந்தம்பாக்கம், சிக்கராயபுரம், நாட்டரசன்பேட்டை பகுதிகளைச் சேர்ந்த தலா ஒருவர் என மொத்தம் 146 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர் எண்ணிக்கை 30.

Tags : district ,Corona ,Chengalpattu , 245 people in Chengalpattu district, coronavirus
× RELATED தேர்தல் பற்றாளர்கள் ஆய்வு கூட்டம்