சித்த மருத்துவத்துக்கு பாரபட்சம் காட்டப்படுகிறதா? வைரசை கட்டுப்படுத்துவதில் வெற்றி கண்ட இந்திய மருத்துவ முறை

* தலைவலியானாலும் உடனே மருந்து கடைகளில் அலோபதி மாத்திரை, மருந்து, டானிக்கை வாங்கி சாப்பிடுவது பலரின் வழக்கம்.

* நாகரிக உலகில் எல்லாமே மாறிப்போய் விட்டது. இயற்கையை நாம் அழித்து வருகிறோம்; இயற்கை உணவுகளை ஒதுக்கி வருகிறோம்.  செயற்கையான வாழ்க்கைக்கு மாறி விட்டோம்.

* இயற்கை வளங்கள் அழிந்து வருகின்றன. வன விலங்குகள் வேட்டையாடப்படுகின்றன; மனிதன் மாறி விட்டான்; அதன் விளைவு தான் புதுப்புது நோய்கள் என்று ஆய்வுகள் சொல்லாமல் இல்லை.

* கொரோனா வந்தபின், 100 நாட்களை தாண்டி பொது ஊரடங்கு நீடித்து கொண்டிருக்கிறது. ஆனால், எந்த ஒருவரும் தலைவலி என்று டாக்டரிடம் போவதில்லை.

* எல்லோரின் கவனமும் கொரோனாவை கட்டுப்படுத்துவது; மனிதர்களை காப்பாற்றுவதில் தான். தவிர்ப்பு முறைகளை அரசு சொல்லியும் மக்கள், நமக்கு என்ன வரப்போகிறது...என்று அலட்சியமாக இருந்ததால் லட்சங்களை பாதிப்பு தாண்டி கொண்டிருக்கிறது. கொரோனா - எந்த மருந்துகள் சிறந்தது என்ற வாதங்களும் அதிகரித்து விட்டன. அலோபதி தான் என்று ஆங்கில மருத்துவர்கள் வழக்கம் போல வாதம்; சித்த மருந்துகளுக்கு குரல் ஓங்கி கொடுக்க ஆளில்லை; காரணம், அது தமிழகத்துடன் நின்று விட்டது. கொரோனா தான் இப்போது பல மாநிலங்களில் இந்திய மருத்துவ முறைகளை பரப்பி வருகிறது.

வீட்டுக்குள் முடங்கி விட்டவர்களுக்கோ, தற்காப்பு முறைகளை கையாள்பவர்களுக்கோ அதாவது, 85 சதவீதம் பேருக்கு வைரஸ் பாதிக்கவில்லை; 15 சதவீதம் பேருக்கு தான் அதிக பாதிப்பு. அதிலும் 3 சதவீதம் பேருக்கு தான் தீவிர சிகிச்சை என்கின்றனர் டாக்டர்கள். சித்த மருந்துகளுக்கு ஆரம்ப நிலையில் குணப்படுத்தும் வல்லமை உள்ளது. வைரஸ் பாதிப்பு  அதிகமானால் கைகொடுப்பது அலோபதி தான் என்பதும் அவர்கள் உறுதியான வாதம். சித்தாவை ஒதுக்காதீர்கள்; வழி விடுங்கள்; பாரபட்சம் காட்டாதீர்கள் என்று இப்போது தான் குரல் பரவத் துவங்கி உள்ளது. மக்களே, இயற்கை உணவுகள், இயற்கை மருத்துவ முறை என்று திரும்பி விடுவார்களோ என்ற பயம் என்றும் வாதிடுகின்றனர். கொரோனாவுக்கு பின் பல விஷயங்கள் எதிர்காலத்தில் மாறும்; அது தான் உலகின் புதிய நடைமுறையாகி விடும். அப்படி இயற்கை உணவுகள். இயற்கை மருந்துகளுக்கு மக்கள் போக்கு மாறி விடுமோ? இதோ நான்கு கோணங்களில் 4 விஐபிக்கள் அலசல்:

Related Stories: