×

மது போதை தகராறில் பெண் அடித்து கொலை: கள்ளக்காதலன் கைது

வேளச்சேரி: மதுபோதை தகராறில் பெண்ணை அடித்து கொலை செய்த கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர். வேளச்சேரி அண்ணாநகர் 5வது பிரதான சாலை நடைபாதையில், கடந்த 10ம் தேதி மதியம் சுமார் 55 வயது மதிக்கத்தக்க பெண் தலையில் படுகாயங்களுடன் கிடந்தார். அப்பகுதியினர் அவரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். இதுகுறித்து வேளச்சேரி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில், இறந்தவர் பெயர் செல்வி (55) என்பதும், வேளச்சேரி அண்ணாநகர் பிரதான சாலை நடைபாதையில் வசித்து வந்தார் என்பதும் தெரியவந்தது.

பழைய பொருட்களை பொறுக்கி விற்பனை செய்து வந்த செல்வி, பரணிதரன் (40) என்பவருடன் வசித்துள்ளார். அவரை பிடித்து விசாரித்தபோது, செல்வியுடன் கடந்த 5 ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வந்துள்ளார். இவர்கள், இரவில் ஒன்றாக மது அருந்துவார்களாம். கடந்த 9ம் தேதி இரவு மது அருந்தியபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த பரணிதரன் அங்கிருந்த உருட்டுக் கட்டையால் செல்வியை சரமாரி தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார். இதில் படுகாயமடைந்த செல்வி இறந்தது தெரிந்தது. இதன் அடிப்படையில், கொலை வழக்குப்பதிவு செய்து, பரணிதரனை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். 


Tags : death , Alcoholism, woman, beating to death, boyfriend, arrested
× RELATED வயதுக்கு மீறிய உறவை உறவினர்கள்...