திருச்சி ஏர்போர்ட்டில் ரூ.31 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி: வெளிநாடுகளில் இருந்து சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக மத்திய அரசு சார்பில் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று  முன்தினம் இரவு சார்ஜாவில் இருந்து 177 இந்தியர்கள் திருச்சி அழைத்து வரப்பட்டனர். கொரோனா பரிசோதனைக்கு பின் சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, திருச்சியை சேர்ந்த தனலட்சுமி, கலைச்செல்வி, பிரியா ஆகியோர் தங்கள் உடலில் மறைத்து வைத்து ரூ.31 லட்சம் மதிப்புள்ள 780 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. அந்த தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

Related Stories: