×

நெல்லையில் இதுவரை 21பேர் பலி; கொரோனா’ உயிரிழப்புக்கு பின் நிகழும் சோகங்கள்: உடலை அடக்கம் செய்வதில் சவால்

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் கொரோனாவுக்கு இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர். உடல்களை அடக்கம் செய்வதில் சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கு தாங்க முடியாத சோதனை அளிக்கிறது. கொரோனா பாதித்த ஒரு நபர்,   உயிரிழக்க நேரிட்டால் அவரது உடலை பாதுகாப்பான முறையில் அடக்கம் செய்ய மேற்கொள்ளப்படும் ஏற்பாடுகள் உறவினர்களுக்கும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கும் பெரும் சவாலாக அமைகிறது. இதற்கு முக்கிய காரணம்  இதுவரை நிகழ்ந்த கொரோனா உயிரிழப்பு சம்பவங்களில், இறந்த நபர்களின் மிக நெருங்கிய ரத்த உறவினர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதே மருத்துவமனை அல்லது தனியார் மருத்துவமனையிலோ சிகிச்சையில் இருக்கும் நிலை பல குடும்பத்தாருக்கு ஏற்படுகிறது.

இந்த சூழ்நிலையில் இறந்தவரின் உடலை அடக்கம் செய்வதற்கோ அவரது உடலை பார்ப்பதற்குகூட சந்தர்ப்பம் கிடைக்காத பெருத்த சோகத்துக்கு உறவினர்கள் ஆளாகின்றனர். அவர்களால் இறுதி சடங்குகூட செய்ய முடியாத சூழலில் கொரோனா தொற்றால் இறந்தவர் என்பதால் பிற உறவினர்கள், நண்பர்களும்கூட நேரிடையாக உதவி செய்ய தயங்குகின்றனர்.  இறந்த நபரின் உடலை பெற சம்பந்தப்பட்ட தாலுகா கிராம நிர்வாக அலுவலர், சுகாதார ஆய்வாளர் ஆகியோரின் பங்களிப்பும் தேவைப்படுகிறது. இந்த சூழ்நிலையில் உடலை பெற்று அடக்கம் செய்வதே உறவினர்களுக்கு மற்றொரு சோகத்தை ஏற்படுத்துகிறது.

நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை இதுவரை கொரோனாவுக்கு 21பேர் உயிரிழந்துள்ளனர். நெல்லையில் செஞ்சிலுவை சங்கம் எஸ்டிபிஐ மற்றும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தன்னார்வலர்கள்,  கொரோனாவால் பாதித்து உயிரிழந்தோர் உடலை அடக்கம் செய்யும் பணியை மேற்கொண்டுள்ளனர்.  இந்த அமைப்பினர் நெல்லை மாவட்டத்தில் நேற்றுவரை 16 நபர்களின் உடலை பெற்று அவரவர் மதவழக்கத்தின்படி இறுதிசடங்கு செய்து நல்லடக்கம் செய்ய உதவி வருகின்றனர்.

Tags : death ,Nellai ,Corona , Rice, corona death, burial challenge
× RELATED நெல்லை மக்களவைத் தொகுதியில் தேர்தல் விதிகளை மீறியதாக 564 வழக்குகள் பதிவு..!!