கேரளா தங்க கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னா, சந்தீப்பை 14 நாட்கள் சிறையில் வைக்க உத்தரவு: கொரோனா பரிசோதனை மேற்கொண்டதால் என்.ஐ.ஏ-க்கு சிக்கல்

கேரளா:  கேரள தங்கக்கடத்தில் வழக்கில் கைதான ஸ்வப்னா மற்றும் சந்தீப் நாயரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.   கேரளாவை உலுக்கும் தங்கக்கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த ஸ்வப்னா மற்றும் அவரது கூட்டாளி சந்தீப் நாயர் ஆகியோர் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர். பின்னர், என்.ஐ.ஏ அதிகாரிகள் அவர்களை விசாரணைக்காக கொச்சினுக்கு அழைத்து சென்றனர். அப்போது அவர்களை விசாரணை நடத்தப்பட்டதோடு, என்.ஐ.ஏ நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன. அதற்கு முன்பாக ஸ்வப்னாவுக்கும் சந்தீப் நாயருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், இருவரையும் என்.ஐ.ஏ நீதிமன்றத்தில், நீதிபதி அனில்குமார் முன்பு ஆஜர் படுத்தப்பட்டனர். அப்போது விசாரணை நடத்திய அனில்குமார், இருவரையும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையிலும், இருவரையும் சிறையில் அடைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏனெனில், ஸ்வப்னா, சந்தீப் ஆகியோருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் பரிசோதனையின் முடிவுகள் வெளி வராத நிலையில், கொரோனா சிகிச்சை மையத்தில் இருவரையும் சேர்க்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஸ்வப்னா, சந்தீப்பை சிறையில் அடைப்பதில் என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கு சிக்கல் உருவாகியுள்ளது.

Related Stories: