×

ஊரடங்கை மீறிய வெளியே சுற்றியதால் வாகனத்தை பறிமுதல் செய்த போலீஸ்; விரக்தியில் இளைஞர் தீக்குளிப்பு...! திருப்பத்தூரில் பரபரப்பு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் ஊரடங்கை மீறி இயக்கிய வாகனத்தை பறிமுதல் செய்ததால் இளைஞர் தீக்குளித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்றானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா தாக்கத்தால் தமிழகத்தில் ஒருசில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதிலும் ஒவ்வொரு ஞயிற்று கிழமையும் முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் பொதுமக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தேவை இல்லாமல் சாலைகளில் சுற்றுவோர் மீது வழக்குப்பதிவு செய்வதோடு, வாகனங்களும் பறிமுதல் செய்யப்படுவதாக காவல் துறையினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் அண்ணா நகரை சேர்ந்த முகிலன் என்பவர் ஊரடங்கை மீறியதாக வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தன. இதனால் ஆத்திரமடைந்த முகிலன் தீக்குளித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் முகிலன். இவர் தனியார் தொழிற்சாலையில் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவரது வீட்டிலிருந்து 100 அடி தூரத்தில் போலீசார் தடுப்புகள் அமைக்கப்பட்டு ஊரடங்கு விதிகளை மீறி செயல்படுபடவைகளின் வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றன.

இந்நிலையில், முகிலன் விதிகளை மீறி வாகனத்தை இயக்கி வந்ததாகக்கூறி காவல் துறையினர் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து, அதனை அருகில் உள்ள பள்ளியில் நிறுத்தி வைத்தன. இதனால் மனமுடைந்த முகிலன் சம்பவ இடத்திலேயே பெட்ரோலை  ஊற்றி தீவைத்து கொண்டார். இதனைத்தொடர்ந்து, அப்பகுதி மக்கள் அவரை காப்பாற்றி மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர், தகவலை அறிந்த காமினி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Tirupati , Confiscation, police, youth, arson, Tirupattur
× RELATED நாட்டின் தலைநகரான டெல்லியில் மின்சார...