×

அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சனைத் தொடர்ந்து நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது குழந்தைக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி..!!

மும்பை: பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது கணவர் மற்றும், மாமனாருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது குழந்தைக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்திய திரையுலகின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் அமிதாப் பச்சன். பாலிவுட் மட்டுமின்றி இந்திய அளவில் பிரபலமாக இருப்பவர். இந்நிலையில் இவருக்கு சில நாட்களாக உடல்நலம் சரியாக இல்லை என்பதால் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து தற்போது இவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை தனது சமூக வலைத்தளமான ட்விட்டரில் அறிவித்திருந்தார். மேலும் அவருடன் கடந்த 10 நாட்கள் தொடர்பில் இருந்தவர்களையும் டெஸ்ட் செய்ய அறிவுறுத்தி இருந்தார். இதனிடையே அவரின் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு இருந்த நிலையில், அவரின் மகன் மற்றும் நடிகர் அபிஷேக் பச்சனுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஜெயா பச்சன் மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராய் இருவருக்கும் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டு, அவர்கள் இருவருக்கும் கொரோனா முடிவு இன்று காலை நெகடிவ் என வந்துள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் தற்போது பாசிட்டிவ் - ஆக மாறி ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது குழந்தைக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது கணவர் மற்றும், மாமனாருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது குழந்தைக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

Tags : Aishwarya Rai ,baby ,Amitabh Bachchan ,Abhishek Bachchan , Amitabh Bachchan, Abhishek Bachchan. Actress Aishwarya Rai, Corona
× RELATED கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார் நடிகை ஐஸ்வர்யா ராய்