×

சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கில் மேலும் 5 காவலர்கள் சஸ்பெண்ட்!

சாத்தான்குளம்: சாத்தான்குளம் தந்தை மகன் கொலைவழக்கில் மேலும் 5 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த மார்ச் மாதம் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். பின்னர், கைது செய்யப்பட்ட இருவரும் அடுத்தடுத்து காவல் நிலையத்தில் மரணமடைந்தனர். இதனால், நாடு முழுவதும் போராட்டங்கள் பல வெடித்தன. இதனைத்தொடர்ந்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி  சிபிஐ விராசனைக்கு உத்தரவிட்டார். இந்நிலையில், இருவர் உயிரிழந்ததை, கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டது.

பின்னர், விசாரணை மேற்கொண்ட சிபிசிஐடி போலீசார் முதற்கட்டமாக 5 பேரை கைது செய்தனர். இதனைத்தொடர்ந்து, மேலும் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இதில், சாத்தான்குளம் தந்தை, மகன் சித்ரவதை மரணம் தொடர்பாக கைதான மேலும் 5 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை, காவலர்கள் சாமதுரை, செல்லதுரை ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். காவலர்கள் வெயிலுமுத்து, தாமஸ் பிரான்சிஸ், ஆகியோரையும் எஸ்.பி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். தந்தை, மகன் சித்ரவதை கொலை வழக்கில் இதுவரை 10 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags : guards ,Sathankulam ,Satan Pool , Sathankulam, double murder, guards, suspended
× RELATED சாத்தான்குளம் கொலை வழக்கு.: காவலர்கள்...