ஊரடங்கு நேரத்தில் அவசர கதியில் கோவில் திருப்பணியை தொடங்கியது ஏன்?: முறைகேடுகள் நடக்க வாய்ப்பிருப்பதாக பக்தர்கள் சந்தேகம்!!!

திண்டுக்கல்: பழனி, தண்டாயுதபாணி திருக்கோவிலில் அவசர கதியில் திருப்பணிகள் நடப்பதால் முறைகேடுகள் நடக்க வாய்ப்பிருப்பதாக பக்தர்கள் சந்தேகம் தெரிவித்திருக்கின்றனர். 2006ம் ஆண்டு குடமுழக்கின் போது நவபாஷான சிலையை கடத்த முயற்சி நடந்ததாக கூறப்படுவதை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலில் கடந்த 2006ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. அதற்கு பின்னர் 12 ஆண்டுகளுக்கு பிறகாக கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என பக்தர்கள் தொடர்ந்து வலியுறுத்தியத்தின் பெயராக தற்போது பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கான திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஊரடங்கு காரணமாக பக்தர்கள் மலை மீது அனுமதிக்கப்படுவதில்லை. இந்த நிலையில் அறநிலையத்துறையும், கோவில் நிர்வாகவும் இணைந்து கும்பாபிஷேகம் நடத்துவதற்கான திருப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கோவில் கோபுரங்களில் சேதமடைந்த சாமி சிலைகளை சரிசெய்வதற்காக சாரங்கள் கட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த பணிகள் நடைபெறுவதில் பக்தர்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது. ஏனெனில் கடந்த 2006ம் ஆண்டு பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக திருப்பணிகள் நடத்தப்பட்ட போது இங்குள்ள நவபாஷாண முருகன் சிலையை திருடுவதற்காக முயற்சி நடந்ததாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்து அதனை வெளியிட்டனர்.

இது உலகளவில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பக்தர்கள் யாரும் மலை மீது செல்லாமல் இருக்கக்கூடிய இந்த காலகட்டத்தில் கோவில் நிர்வாகம் திருப்பணிகளை மேற்கொண்டு வருவது பக்தர்களுக்கு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. ஊரடங்கு நேரத்தில் அவசர கதியில் கோவில் திருப்பணியை தொடங்கியது ஏன்? எனவும் பக்தர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Related Stories: