×

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு; சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்பு...வானிலை மையம் தகவல்..!!

சென்னை: அடுத்த 24 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு  உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம்  வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக , கோவை, ஈரோடு,  சேலம், தர்மபுரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கனமழை  பெய்யும்.

திருவண்ணாமலை, கள்ளிக்குறிச்சி, அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், ராமநாதபுரம்,  தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்  இலேசான மழையும் பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடனும், நகரின் ஒருசில  பகுதிகளில் இலேசான மழை பெய்யக்ககூடும் என்றும் அதிகப்பட்ச வெப்பநிலை 36 டிகிரி குறைந்தபட்சம் 26 டிகிரி  செல்சியல் ஒட்டி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பெருமபலான மாவட்டங்களில்  மழை பெய்துள்ளது. 5 சென்டிமீட்டருக்கு மேல் மழை பெய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Tags : Tamil Nadu ,Chennai ,districts ,Weather Center ,Thundershowers , Heavy rains in 14 districts in Tamil Nadu Thundershowers in Chennai
× RELATED தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 19...