×

முதன்முறையாக ஒரே நாளில் 28,637 பேர் பாதிப்பு; இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8.49 லட்சத்தை தாண்டியது; 22,674 பேர் பலி

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 லட்சத்து 49 ஆயிரத்தை தாண்டியது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீயாக பரவி வருகிறது. கொரோனா வைரஸால்   இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,49,553-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 28,637 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் இதுவரை 22,674 பேர் உயிரிழந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 551   உயிரிழந்துள்ளனர். இதுவரை 5,34,621 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 19,235 பேர் குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 2,46,600 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 10,116 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1,36,985 பேர் குணமடைந்துள்ளனர். இந்த வரிசையில் தமிழகம் 2-வது இடத்தில்   உள்ளது. தமிழகத்தில் 1,34,226 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1,898 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 85,915 பேர் குணமடைந்துள்ளனர். டெல்லி 3-வது இடத்தில் உள்ளது. டெல்லியில் 1,10,921 பேருக்கு தொற்று   உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, 3,334 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 87,692 பேர் குணமடைந்துள்ளனர். உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளளது குறிப்பிடத்தக்கது.

மாநில வாரியாக விவரம்:

அசாமில் 15,536 பேருக்கு பாதிப்பு; 35 பேர் பலி; 9,150 பேர் குணமடைந்தது.
பீகாரில் 15,373 பேருக்கு பாதிப்பு; 131 பேர் பலி; 10,685 பேர் குணமடைந்தது.
சண்டிகரில் 555 பேருக்கு பாதிப்பு; 7 பேர் பலி; 413 பேர் குணமடைந்தது.
சத்தீஸ்கரில் 3897 பேருக்கு பாதிப்பு; 17 பேர் பலி; 3070 பேர் குணமடைந்தது.

கோவாவில் 2,368 பேருக்கு பாதிப்பு; 12 பேர் பலி; 1428 பேர் குணமடைந்தது.
குஜராத்தில் 40,941 பேருக்கு பாதிப்பு; 2032 பேர் பலி; 28,649 பேர் குணமடைந்தது.
அரியானாவில் 20,582 பேருக்கு பாதிப்பு; 297 பேர் பலி; 15,394 பேர் குணமடைந்தது.
திரிபுராவில் 1,949 பேருக்கு பாதிப்பு; 2 பேர் பலி; 1,375 பேர் குணமடைந்தது.

கேரளாவில் 7438 பேருக்கு பாதிப்பு; 29 பேர் பலி; 3963 பேர் குணமடைந்தது.
ராஜஸ்தானில் 23,748 பேருக்கு பாதிப்பு; 503 பேர் பலி; 17,869 பேர் குணமடைந்தது.
ஜார்கண்டில் 3613 பேருக்கு பாதிப்பு; 23 பேர் பலி; 2243 பேர் குணமடைந்தது.
லடாக்கில் 1077 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 928 பேர் குணமடைந்தது.

மணிப்பூரில் 1,593 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 843 பேர் குணமடைந்தது.
மேகலாயாவில் 207 பேருக்கு பாதிப்பு; 2 பேர் பலி; 66 பேர் குணமடைந்தது.
மிஸ்ரோமில் 227 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 150 பேர் குணமடைந்தது.
நாகாலாந்தில் 748 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 313 பேர் குணமடைந்தது.
ஒடிசாவில் 12,526 பேருக்கு பாதிப்பு; 61 பேர் பலி; 8360 பேர் குணமடைந்தது.

பாண்டிச்சேரி 1337 பேருக்கு பாதிப்பு; 18 பேர் பலி; 690 பேர் குணமடைந்தது.
பஞ்சாப்பில் 7,587 பேருக்கு பாதிப்பு; 195 பேர் பலி; 5040 பேர் குணமடைந்தது.
உத்தரகாண்ட்டில் 3,417 பேருக்கு பாதிப்பு; 46 பேர் பலி; 2,718 பேர் குணமடைந்தது.
கர்நாடகாவில் 36,216 பேருக்கு பாதிப்பு; 613 பேர் பலி; 14,716 பேர் குணமடைந்தது.

ஜம்மு காஷ்மீரில் 10,156 பேருக்கு பாதிப்பு; 169 பேர் பலி; 5,895 பேர் குணமடைந்தது.
தெலுங்கானாவில் 33,402 பேருக்கு பாதிப்பு; 348 பேர் பலி; 20,919 பேர் குணமடைந்தது.
மேற்கு வங்கத்தில் 28,453 பேருக்கு பாதிப்பு; 906 பேர் பலி; 17,959 பேர் குணமடைந்தது.
உத்தரப்பிரதேசத்தில் 35,092 பேருக்கு பாதிப்பு; 913 பேர் பலி; 22,689 பேர் குணமடைந்தது.

ஆந்திரப்பிரதேசத்தில் 27,235 பேருக்கு பாதிப்பு; 309 பேர் பலி; 14,393 பேர் குணமடைந்தது.
அருணாச்சலப்பிரதேசத்தில் 341 பேருக்கு பாதிப்பு; 2 பேர் பலி; 125 பேர் குணமடைந்தது.
மத்தியப்பிரதேசத்தில் 17,201 பேருக்கு பாதிப்பு; 644 பேர் பலி; 12,679 பேர் குணமடைந்தது.
இமாச்சலப்பிரதேசத்தில் 1182 பேருக்கு பாதிப்பு; 11 பேர் பலி; 908 பேர் குணமடைந்தது.

அந்தமானில் நிக்கோபார் தீவுகளில் 163 பேருக்கு பாதிப்பு; 93 பேர் குணமடைந்துள்ளார். யாரும் உயிரிழக்கவில்லை.
தாதர் நகர் ஹவேலியில் 471 பேருக்கு பாதிப்பு; 226 பேர் குணமடைந்துள்ளார். யாரும் உயிரிழக்கவில்லை.
சிக்கிமில் 151 பேருக்கு பாதிப்பு; 80 பேர் குணமடைந்துள்ளார். யாரும் உயிரிழக்கவில்லை.



Tags : corona victims ,India , 28,637 affected in one day The number of corona victims in India has crossed 8.49 lakh; 22,674 killed
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...