திருக்கழுக்குன்றம் பேரூராட்சி அலுவலகத்தில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் பேரூராட்சி அலுவலகத்தில் 10 பேருக்கு கொரோனா  உறுதிபடுத்தப்பட்டது. இதையடுத்து பேரூராட்சி அலுவலகம் மூடப்பட்டது. திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தூய்மை பணியாளராக வேலைப் பார்த்த 35 வயதுடைய ஒருவருக்கு கடந்த 6ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவரை மதுராந்தகம் அடுத்த பழமத்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த 8 ம் தேதி அவர் உயிரிழந்தார்.  இந்நிலையில் பேரூராட்சியில் பணிபுரியும் அலுவலக பணியாளர்கள் மற்றும் தூய்மைப்பணியாளர்கள் என 128 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் நேற்று பரிசோதனை முடிவு வந்ததில் பேரூராட்சி ஊழியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் என 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொற்று உறுதி செய்யப்பட்ட 10 பேரும் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பேரூராட்சி அலுவலகத்தில் ஒரே நாளில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதில் பேரூராட்சி ஊழியர்கள் இதர தூய்மைப்பணியாளர்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் 10 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பேரூராட்சி அலுவலகம் மூடப்பட்டது.  

கொரோனாவுக்கு 2 பேர் பலி

உத்திரமேரூர் ஒன்றியத்திற்குட்பட்ட திருவந்தவார் கிராமத்தை சேர்ந்த, 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், மனநிலை பாதிக்கப்பட்டு கடந்த ஜூன் மாதம் 20 ம் தேதியன்று வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பின்னர் அவர் தனிமைபடுத்தப்பட்டு மருத்துவர்கள் கொரோவுக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து சாலவாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் கருவேப்பம்பூண்டி கிராமத்தை சேர்ந்த 55 மதிக்கதக்க விவசாயி ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Related Stories: