×

பெண்கள் ரயில்வே ஸ்டேஷன்!

ராஜஸ்தானின் தலைநகரமான ஜெய்ப்பூரிலுள்ள காந்திநகர் ரயில்வே ஸ்டேஷன் முழுக்க பெண்களால் நிர்வகிக்கப்பட்டு ஆச்சரியம் தருகிறது. டிக்கெட் கலெக்டர் டூ ஸ்டேஷன் சூப்பரின்டெண்டென்ட் வரை அனைத்து பதவிகளும் பெண்களுக்கு மட்டுமேதான். தினமும் இங்கு வரும் 75 ரயில்களில் ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட  பயணிகள் பயணிக்கின்றனர்.

ரயில்வே பாதுகாப்புப் படையிலும் பதினொரு பெண் காவலர்களை தேர்வு செய்து நியமிக்க உள்ளனர். ‘‘எனது ஓராண்டு பணியில்  ஸ்டேஷன் மாஸ்டராக என்னை நியமிப்பார்கள் என நினைக்கவேயில்லை. பணியிடத்தில் பாதுகாப்பு, வேகமான சேவை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம்  கொடுப்பேன்!’’ என்கிறார் ஸ்டேஷன் மாஸ்டர் ஏஞ்சலா ஸ்டெல்லா.

- ரோனி

Tags :
× RELATED பூஜைப் பொருட்கள் தயாரிப்பிலும் லாபம் பார்க்கலாம்!