×

அமிதாப் பச்சனுக்கு கொரோனா

மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு மிகத் தீவிரமாக உள்ளது. இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் (77) தனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக டிவிட்டரில் நேற்று தெரிவித்துள்ளார். அமிதாப் தனது டிவிட்டர் பதிவில், ‘‘எனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். எனது குடும்பத்தினர் மற்றும் பணியாளர்களுக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. இன்னும் முடிவு வரவில்லை.

என்னுடன் கடந்த 10 நாட்களாக பழகிய அனைவரும் கொரோனா சோதனை செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்’’ என கூறி உள்ளார்.
அமிதாப்புக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பது திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதே போல் அமிதாப்பின் மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவரும் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Corona ,Amitabh Bachchan , Corona, Amitabh Bachchan
× RELATED அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அட்மிட்