×

பெட்ரோல் விலையில் மாற்றமில்லை; கடந்த 6 நாட்களுக்குப்பின் டீசல் லிட்டருக்கு 10 காசு உயர்வு; சென்னையில் பெட்ரோல் ரூ.83.63-க்கும், டீசல் ரூ.78.01-க்கும் விற்பனை.!!

சென்னை; கடந்த 6 நாட்களுக்குப்பின் டீசல் லிட்டருக்கு,10 காசுகள் உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு தினமும் மாற்றி அமைத்து  வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா  எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு இதன் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது.

உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் தாக்கத்தால், கச்சா எண்ணெய் விலை கடந்த பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் வெகுவாக குறைந்தது. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 15 டாலர் என்ற நிலைக்கும் கீழ் சரிந்து வந்தது.   அப்போதெல்லாம், இந்தியாவில் விலை குறைப்பின் பலனை மக்களுக்கு கொடுக்காமல், வரியை மத்திய, மாநில அரசுகள் உயர்த்திக் கொண்டன. நடப்பு மாத தொடக்கத்தில் இருந்து கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரிக்கத்  தொடங்கியுள்ளது.

இதனால், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வருகிறது. கடந்த ஜூன் 7-ம் தேதியில் இருந்து 21 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வந்தது. இருப்பினும், கடந்த 13  நாட்களாக ஜூன் 29ம் தேதியில் இருந்து பெட்ரோல், டீசல், விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டது. இதற்கிடையே, ஒரு வாரத்திற்கு பின், கடந்த 7-ம் தேதி டீசல் விலை லிட்டருக்கு, 19 காசுகள் உயர்ந்து, 77.91 ரூபாயாக அதிகரித்தது.  அதேசமயம், பெட்ரோல் விலையில் மாற்றமில்லாமல், 83.63 ரூபாய்க்கு விற்பனையானது. இந்நிலையில், இன்று கடந்த 6 நாட்களுக்குப்பின் டீசல் லிட்டருக்கு,10 காசுகள் உயர்ந்து 78.01 ரூபாயாக அதிகரித்தது.

இதன் மூலம் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.83.63-க்கும், டீசல் ரூ.78.01-க்கும் விற்கப்படுகிறது. கடந்த ஜூன் 7-ம் தேதி முதல் லிட்டருக்கு பெட்ரோல் ரூ.8.09ம், டீசல் ரூ.9.79ம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இதுவரை இன்று பெட்ரோல் டீசல் விலை

தேதி    பெட்ரோல்    உயர்வு    டீசல்    உயர்வு

29        83.63         04 காசு    77.72    11 காசு
30        83.63         00 காசு    77.72    00 காசு
01        83.63         00 காசு    77.72    00 காசு
02        83.63         00 காசு    77.72    00 காசு
03        83.63         00 காசு    77.72    00 காசு
04        83.63         00 காசு    77.72    00 காசு
05        83.63         00 காசு    77.72    00 காசு
06        83.63         00 காசு    77.72    00 காசு
07        83.63         00 காசு    77.91    19 காசு
08        83.63         00 காசு    77.91    00 காசு
09        83.63         00 காசு    77.91    00 காசு
10        83.63         00 காசு    77.91    00 காசு
11        83.63         00 காசு    77.91    00 காசு
12        83.63         00 காசு    78.01    10 காசு

Tags : Chennai , There is no change in the price of gasoline; 10 cent increase per liter of diesel after last 6 days; In Chennai, petrol sells for Rs 83.63 and diesel for Rs 78.01.
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...