×

சென்னைக்கு வரும் விமானத்தில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

சென்னை: கொரோனா ஊரடங்கால் பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டது. கடந்த மே 25ம் தேதியில் இருந்து குறைந்தளவு விமான சேவைகளுடன் இயக்கப்பட்டது. பயணிகள் எண்ணிக்கையும் மிகக் குறைவாகவே இருந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக சென்னையில் கொரோனா வைரஸ் தாக்கம் ஓரளவு குறைந்துள்ளது. அதேநேரத்தில், மாநிலத்தின் மற்ற மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதையடுத்து கடந்த 2 நாட்களாக வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து சென்னைக்கு வரும் விமான பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

உள்நாட்டு விமான நிலையத்துக்கு நேற்று வந்த 28 விமானங்களில் 2,300 பேர் சென்னைக்கு வந்தனர். நேற்று சென்னைக்கு வரும் 28 விமானங்களில் 2,450 பேர் முன்பதிவு செய்துள்ளனர். கடந்த 10 தினங்களுக்கு முன்பு சென்னைக்கு வரும் விமானங்களில் பயணிகள் எண்ணிக்கை 1,500க்கும் குறைவாகவே இருந்தது. சென்னையில் இருந்து செல்லும் விமானங்களில் பயணிகளின் எண்ணிக்கை 3,000க்கும் அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.


Tags : passengers ,flight ,Chennai , Chennai, air travelers
× RELATED விமான பயணிகள் எண்ணிக்கை குறைந்தது