×

தங்கம் சவரன் 136 குறைந்தது

சென்னை: தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வந்த நிலையில், நேற்று சவரனுக்கு 136 குறைந்தது. தமிழகத்தில் கடந்த 2 மாதமாக தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. திடீரென வரலாற்று சாதனையும் நிகழ்த்தி வருகிறது. கடந்த 1ம்தேதி ஒரு சவரன் 37,472க்கும், 2ம் தேதி, 3ம் தேதி, 4ம் தேதி, 6ம்தேதிகளில் தங்கம் விலை மாறாமல் சவரன் 36,976 என்று  விற்கப்பட்டது?. அதைத்தொடர்ந்து 7ம்தேதி சவரன் 37,008, 8ம் தேதி 37,536, 9ம் தேதி பவுன் 37,744க்கும் விற்கப்பட்டது. சவரன் 37,744 என்பது தங்கம் விலை வரலாற்றில் அதிகப்பட்ச விலை என்ற சாதனையை படைத்தது.

இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் நேற்று முன்தினம் கிராமுக்கு 12 குறைந்து  ஒரு கிராம் 4,706க்கும், சவரனுக்கு 96 குறைந்து ஒரு சவரன் 37,648க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில் நேற்றும் தங்கம் விலை  சற்று குறைந்தது. அதாவது கிராமுக்கு 17 குறைந்து ஒரு கிராம் 4,689க்கும், சவரனுக்கு  136 குறைந்து ஒரு சவரன் 37,512க்கும் விற்கப்பட்டது. தங்கம் விலை உயர்ந்தால் அதிக அளவு உயர்கிறது. குறைந்தால் பெயரளவுக்கு குறைவது என்பது நகை வாங்குவோரை கவலையடைய செய்துள்ளது.

Tags : Gold Shaving
× RELATED தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து ஒரு சவரன் ரூ.50 ஆயிரம் ஆனது