×

முதல் டெஸ்டில் போராடுகிறது இங்கிலாந்து

சவுத்தாம்ப்டன்: வெ. இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில், இங்கி. அணி 2வது இன்னிங்சில் பொறுப்புடன் விளையாடி ரன் குவித்து வருகிறது. ரோஸ் பவுல் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 204 ரன்னுக்கு சுருண்டது. கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அதிகபட்சமாக 43 ரன் எடுத்தார். எதிர் தரப்பு கேப்டன் ஹோல்டர் சிறப்பாகப் பந்துவீசி 6 விக்கெட்டும், கேப்ரியல் 4 விக்கெட்டும் கைப்பற்றினர். அடுத்து கள மிறங்கிய வெஸ்ட் இண்டீஸ், முதல் இன்னிங்சில் 318 ரன் குவித்து ஆல் அவுட்டானது.

கிரெய்க் பிராத்வெய்ட் 65, டவ்ரிச் 61, சேஸ் 47, புரூக்ஸ் 39, கேம்பெல் 28 ரன் எடுத்தனர். இங்கிலாந்து பந்துவீச்சில் ஸ்டோக்ஸ் 4, ஆண்டர்சன் 3, பெஸ் 2, வுட் 1 விக்கெட் வீழ்த்தினர். 114 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கி லாந்து, 69 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 165 ரன் எடுத்து போராடி வருகிறது. பர்ன்ஸ் 42, சிப்லி 50, டென்லி 29 ரன்னில் வெளியேறினர்.



Tags : fight ,England ,Test , England, First Test
× RELATED பாகிஸ்தானுடன் முதல் டெஸ்ட் இங்கிலாந்துக்கு 277 ரன் இலக்கு