×

மலேசியாவில் சிக்கியது மனித பல், உதடுடன் வித்தியாசமான மீன்

கோலாலம்பூர்: மலேசியாவில் ஒரு வித்தியாசமான மீன் கண்டறியப்பட்டுள்ளது. ‘டிரிகர்’ என்ற அந்த மீன் மனித உதட்டையும், பல்லையும் அச்சு அசலாக கொண்டுள்ளது. இந்த மீனின் வாயை மட்டும் பார்க்கும் போது மனித உறுப்பாகவே தோன்றுகிறது. தற்போது இது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. பலரும் இந்த மீனின் போட்டோவையும், தங்களின் உதட்டு குளோஸ் அப் போட்டோவையும் இணைத்து பகிர்ந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி மீனின் உதட்டுக்கு லிப்ஸ்டிக் போட்டு விட்டும் அழகு பார்க்கின்றனர். இந்த டிரிகர் மீன்கள் 40 வெவ்வேறு வகைகளில் இருக்கின்றன. பெரும்பாலும் ஓவல் வடிவத்தில் இருக்கும் டிரிகர் மீன்கள் அனைத்திற்கும் உதடும், பல்லும் மட்டும் மனிதனைப் போலவே இருக்கிறது.


Tags : Malaysia , Malaysia, human dentistry, fish
× RELATED வெளிநாடு தப்ப முயன்ற குற்றவாளி சென்னையில் கைது