×

சிவகாசி தெய்வானை நகரில் தரைப்பாலத்தின் தடுப்பு சுவரை சீரமைக்க கோரிக்கை

சிவகாசி: சிவகாசி நகராட்சி தெய்வானை நகரில் இடிந்து கிடக்கும் தரைப்பாலத்தின் தடுப்புச்சுவரை சீரமைக்க வேண்டும் என மக்கள் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகாசி நகராட்சி 32வது வார்டு பகுதியில் தெய்வானை நகர் அமைந்துள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அச்சகம், பாலிதீன் கம்பெனி, பட்டாசு கடை, கட்டிங், லேமினேசன் கம்பெனிகள் அதிகமாக உள்ளன. இந்த ஆலைகளில் ஏராளமான பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதுதவிர இந்த நிறுவனங்கள் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. கிருதுமால் ஓடையில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி தரமின்றி நடைபெற்றதால் சுவர் இடிந்து ஓடையில் விழுந்து கிடக்கிறது.

இதனால் கிருதுமால் ஓடையை ஓட்டியுள்ள சாலை சரிந்து வருகிறது.  தெய்வானை நகர் நுழைவு பகுதியில் உள்ள காந்தி ரோட்டில் கிருதுமால் ஓடைக்கு மேலே தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தில் ஒருபகுதியில் தடுப்புச் சுவர் முற்றிலும் இடிந்து கிடக்கிறது. இதனால் இந்த பாலம் வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே தடுப்புச்சுவரை சீரமைக்க அதிகாரிள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.Tags : ground bridge ,Sivakasi Deivanai ,Sivakasi Deewan , Sivakasi Deivanai, retaining wall of the ground bridge
× RELATED அவணிப்பூர் கிராமத்தில் தரைப்பாலம் சீரமைக்க கோரிக்கை