×

சேரன்மகாதேவியில் குழாய் உடைப்பால் சாலையில் பள்ளம்

வீரவநல்லூர்: சேரன்மகாதேவியில் குடிநீர் குழாய் உடைப்பால் சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. சேரன்மகாதேவி தாமிரபரணி ஆற்றிலிருந்து ராட்சத குழாய்கள் மூலம் தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் பணகுடி, வடக்கு விஜயநாராயணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் சேரன்மகாதேவி காந்தி பார்க் தென்புறம் பழைய கருவூலக அலுவலகம் எதிரே சாலையில் குழாயில் விரிசல் ஏற்பட்டு பல மாதங்களாக குடிநீர் வீணாகிறது. இதுகுறித்து பணகுடி கூட்டுக்குடிநீர் திட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தும் கண்டுகொள்ளவில்லை.

இதனால் சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது. இந்த பள்ளத்தை கவனிக்காமல் டூவிலர்களில் வருபவர்கள் நிலை தடுமாறி விழுகின்றனர். இதனையடுத்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பள்ளத்தில் தற்காலிகமாக கற்களை வைத்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விபரீதம் ஏற்படும் முன் நடவடிக்கை எடுத்து குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : road ,Cheranmagadevi ,pipe break , Cheranmagadevi, pipe break, groove on the road
× RELATED தனியார் அடுக்குமாடி குடியிருப்பில்...