×

திருக்கோவிலூர் அருகே சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வரும் தரைப்பாலம்: மின் விளக்குகள் அமைக்க கோரிக்கை

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அடுத்த கீழையூரில் இருந்து அரகண்டநல்லூர் பகுதியை இணைக்க தென்பெண்ணையாற்றின் குறுக்கே கடந்த 75 வருடத்திற்கு முன் தரைப்பாலம் அமைக்கப்பட்டது. இந்த தரைப்பாலத்தை திருக்கோவிலூர், அரகண்டநல்லூர், கோதண்டபாணிபுரம், ஆவியூர், நெற்குணம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் திருக்கோவிலூர் பெரியபாலம் சீரமப்பு பணிக்காக  கடந்த மாதம் மூடப்பட்டது. இதனால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் தரை பாலம் வழியே செல்கின்றன. இதற்காக நெடுஞ்சாலை துறை சார்பில் ரூ.5 லட்சம் மதிப்பில் தரைப்பாலம் சீரமைக்கப்பட்டது.

ஆனால் தரைப்பாலத்தின் இருபுறத்திலும் செடிகள் வளர்ந்து முட்புதர்போல் காட்சி அளிக்கிறது. தரைப்பாலத்தில் மின் விளக்கு இல்லாத காரணத்தால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. ஆகையால் நெடுஞ்சாலை துறையினர் தரைப்பாலத்தின் இருபுறத்தில் உள்ள முள்செடிகளை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Ground bridge ,Tirukovilur , Tirukovilur, ground bridge, electric lights
× RELATED முகையூர் பகுதி மக்களுக்கு ஓட்டுக்கு...